மேற்கு வங்காளத்தில் ‘ரோஸ் வேலி’, ‘சாரதா சிட்பண்ட்ஸ்’ மோசடி தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைப் பிரிவு விசாரித்தது. பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது.
 
ராஜீவ் குமார் மேற்கு வங்காள கமிஷ்னர் ஆனார். மோசடி வழக்கை விசாரிக்கும் சிபிஐ, ராஜீவ் குமாரை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டது. சம்மனும் அனுப்பியது.
 
ஆனால் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் அவரை விசாரிக்க கொல்கத்தாவில் அவருடைய வீட்டிற்கு சென்ற போது மாநில போலீஸ் தடுத்து நிறுத்தியது.
 
இதனையடுத்து மம்தா மற்றும் மத்திய அரசுக்கு இடையே மோதல் முற்றியுள்ளது. சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்திய காவல் துறையினரை மம்தா பானர்ஜி பாராட்டினார்.
 
மேலும் மாநில உரிமை பாதுகாக்க பணிய மட்டேன்  உயிரை இழக்கத் தயாராக உள்ளேன். ஆனால், சமரசத்திற்கு இடம் கிடையாது என மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார்.
 
மாநில காவல்துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மம்தா பானர்ஜி பேசுகையில், “திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மோசடி வழக்கில் ஈடுபட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டியபோது நான் வீதியில் இறங்கிப் போராடவில்லை.
 

நேற்று இரவு முதல் சாப்பிடமால் மம்தா தொடரும் சத்தியகிரக போராட்டம்

இப்போது, காவல்துறை அமைப்புக்கு தலைமை வகிக்கும் கமிஷனரை அவமானப்படுத்த முயற்சித்தீர்கள். அதனால்தான் எனக்குக் கோபம் வந்தது. போராட்டத்தில் இறங்கினேன்.
 
இதற்காக என் வாழ்க்கையைக் கூட இழக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்,” என கூறியுள்ளார். வீட்டிற்கு பாதுகாப்புடன் வருவோம் என்று போலீசாரால் வீட்டிற்கு வாக்குறுதியளிக்க முடியாது. அப்படிப்பட்ட பணியை செய்யும் அவர்களை பாராட்டுகிறேன், அவர்களுடன் துணை நிற்பேன் என உறுதிபட மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
 
மேலும் சிபிஐ நடவடிக்கையை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையம் அருகே 2-வது நாளாக சத்தியகிரக தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயகம் சீர்குலைந்ததற்கு மத்திய அரசே காரணம் என சாடியுள்ளார். பாரதிய ஜனதாவை எதிர்ப்பவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கமாக உள்ளதாக குறிப்பிட்டார்.
 
மத்திய அரசை கண்டித்து தாம் நடத்தி வருவது அமைதியான சத்தியாகிரக போராட்டம் என்றார். தமது இந்த தர்ணா போராட்டம் பள்ளி தேர்வுகள் துவங்கும் வரை நீடிக்கும் ( பிப்ரவரி 8) என்றும் கூறியுள்ளார்.
 

மேலும் வாசிக்க : வங்கத்தில் 45 லட்ச முறைகேடு வழக்கு சிக்கலில் சிபிஐ இணை இயக்குநர் பங்கஜ் ஸ்ரீவத்சவா

 
அனைத்து அரசியல் சட்ட அமைப்புகளையும் மோடி அரசு தகர்த்து வருவதாகவும் சாடியுள்ளார்.
 
இதனிடையே மேற்குவங்க மாநிலத்தில் மத்திய அரசு மற்றும் சிபிஐ-க்கு எதிராக நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து அம்மாநில ஆளுநர் கேசரிநாத், மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
 
இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. சிபிஐயை கண்டித்து திரிணாமுல் காங்கிரசார் மாநிலத்தின் பல பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று பாராளுமன்ற இரு அவைகளும் மம்தா சத்தியகிரக போராட்டம் காரணமாக முடங்கியது.. பாஜக இரு எம்பிக்கள் தேவை இல்லாமல் தேர்தல் நேரத்தில் இந்த வேலையை மோடி செய்து இருக்க வேண்டாம் என கவலையுடன் பேசியபடியே சென்றனர்  
 
இந்நிலையில் மம்தாவின் சத்தியகிரக போராட்டம் 2-வது நாளாக நீடித்து வருகிறது.மம்தாவுக்கு காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, திமுக, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.
 
காங்கிரஸ் தலைவர் ராகுல் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்று திரளவேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார்.