சமூக வலைதளங்களில் ஒரு குழந்தை அம்மாவிடம் தன்னை அடிக்க கூடாது. குணமாக சொன்னால் தவறை திருத்திக்கொள்வேன் என்று தாய்க்கு அறிவுரை கூறிய வீடியோ காட்சி வைரலாகி பல பெற்றோர்களை அது சிந்திக்க வைத்தது.

அந்த குழந்தை யார் என்று பலரையும் கேக்க வைத்த நிலையில் அந்த குழந்தை திருப்பூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்ததுள்ளது . திருப்பூர் மண்ணரை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரவீணா. இவர்களது ஒரே மகள் ஸ்மித்திகா. இந்த சிறுமியின் வீடியோதான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்மித்திகா பள்ளிக்கு கொண்டு சென்ற உணவை உண்ணாமல் திருப்பிகொண்டு வந்தார். அவரது தாய் லேசாக அடித்து கேட்டபோது, அடிக்காமல் குணமாக சொல்ல வேண்டும் என்று கூறிய வீடியோதான் பிரபலமாகி வருகிறது.

இதுகுறித்து அவரது தாய் பிரவீணா கூறியபோது, ஸ்மித்திகா மிகவும் சுட்டியான பெண் என்பதால் அவள் செய்யும் குறும்புகளை வீடியோ எடுத்து அவரது தந்தையிடம் காண்பிப்பேன். அவ்வாறு எடுத்த வீடியோவை தனது நண்பர் ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாகவும், அது இவ்வளவு தூரம் பிரபலமடையும் என எதிர்பார்க்கவில்லை எனவும் கூறினார்.