இந்திய அஞ்சல் துறையின் சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் வரும் 18-ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

பணி: அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் (Postal Insurance Direct Agent)

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேலைவாய்ப்புக்காக காத்திருப்போர், சுய தொழில் புரிவோர், முன்னாள் ஆயுள் காப்பீட்டு முகவர்கள், ஓய்வு பெற்ற மத்திய, மாநில ஊழியர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 18 முதல் 65 வயது வரை.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18.09.2018 அன்று காலை 11 மணி முதல் நடைபெறும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை பொது அஞ்சல் அலுவலகம், சென்னை – 600001

தபால் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் மேற்கண்ட தேதியில் நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு வரும்போது கல்வி சான்றிதழ், பிறந்த தேதிக்கு சான்றிதழ் நகல்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்கள் அறிய குறிப்பிட்ட அஞ்சலகத் துறையை தொடர்பு கொள்ளலாம்.