இந்தப் பதிவைப் படிக்கும் முன் இணைக்கப்பட்ட இரு படங்களையும் சற்று உற்றுப் பார்த்து விடுங்கள்.. மூன்றாவது இணைக்கப்பட்ட படம் அது சென்னை நீர்நிலைகளை பற்றிய 1814 மேப் அதைப்பற்றி பிறகு அலசி விடலாம் நாம்..

காரணம் இப்போது சொல்லப்பட போகிற விஷயங்கள் ஒரு அடிப்படை சாராம்சத்தை.. இப்படியாக எப்படியாவது வன்மத்தை தொடர்ந்து விதைத்து விட வேண்டும் என்ற ஒரு பார்முலாவை நமக்கெல்லாம் புரியவைக்கும் அறியாதவர்களுக்கும் தெளியவைக்கும்..

முதல் படம் போட்டவர் #சவுக்கு Shankar A இவர் 97% கோரிடும் சமூகநீதியை அதிகமாக சமூக தளத்தில் பேசுபவர் தன் மனதுக்கு பட்டதை நல்லதோ தப்போ ஆனால் அதை பேசுபவர் அதனால் லட்சக்கணக்கில் பலரால் follow செய்யப்படுபவர்..

இவரின் முதல் படம் போட்ட பதிவில் இரண்டாம் படத்தை பின்னூட்டத்தைப் போட்டவர் #இந்துதமிழன்.. இவர் பக்கம் சென்றால் அங்கு எந்த விவரமும் இருக்காது லாக் செய்தும் வைத்திருப்பார்..

சுருங்க சொல்ல வேண்டும் என்றால் போலி பெயர் போட்ட ஃபேக் ஐடி.. அவர் சொல்ல விரும்புவது இந்தியாவில் அதுவும் முக்கியமாக தமிழ்நாட்டில்..

அதுவும் அதி முக்கியமாக சென்னையில் 1967 க்கு பிறகு தான் ஏரிகள் எல்லாம் காணாமல் போனதாக ஒரு அரிய தகவல்கள் தெரிவித்திருப்பார்..

இன்றைக்கு சென்னையில் இருக்கும் முக்கிய பகுதி குறிப்பிட்ட ஒரு ஜாதியினர் அதிகமாக குடியிருக்கும் இடம் மேற்கு மாம்பலம்..

வரலாறு நமக்கு சொல்லும் உண்மையான 1928 ஆம் ஆண்டுகளில் மேற்கு மாம்பலம் கட்டப்பட்டதே அன்றைய மாம்பழம் ஏரியின் மீது மணலைக் கொட்டி தான் என்பதை ஏன் மறக்க முயலுகிறார்கள் என்று முகமூடி போட்ட மாண்புமிகு #தினமலர் எனும் ஃபேக் ஐடி இடம் நாம் யாரும் கேட்பதில்லை..

இந்த இந்துதமிழன் fakeid பின்னூட்டத்தை ஆதரித்த லைக் சிம்பல் போட்ட இன்னொரு பேக் ஐடி சாரதி..

தற்போது சென்னையிலே அதுவும் மயிலாப்பூரில் அமைந்துள்ள அதிமுக்கிய ராதாகிருஷ்ணன் சாலையில் 1890 க்கு முன் கடலிலே கலக்கும் ஒரு சிற்றாறு ஓடியதை சாரதியும் ஏன் மறந்தார் என்று நாமும் எப்போதும் கேட்பதில்லை..

இது என்ன ஒரு பெரிய விஷயமா.. இது என்னமோ செவ்வாய் என்பது ஒரு கிரகம் போலவும், செவ்வாய் என்கிற கிரகத்துக்கு தோஷம் எல்லாம் கிடையாது போன்ற அறிவியல் உண்மைகளை எல்லாம் உணர்ந்து கொண்டு ஜாதகம் பார்ப்பது தப்பு என்பதை புதிதாக கண்டு பிடித்தவர் போல தூக்கிக்கொண்டு ஏன் வரவேண்டும்.

சவெரா.. உனக்கு வேற வேலையே இல்லையா.. வெட்டியே இல்லையா என்றெல்லாம் இன்பாக்ஸில் அடியேனை இனி குமைந்து எடுப்பீர்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும்..

ஆக அப்படி பதிவர் சவுக்கு சங்கர் போட்ட பதிவின் படத்தில், ஒரு நபர் அதுவும் முகமூடி அணிந்துகொண்டு விதைக்கப்படும் வன்மத்தின் கருவை காண செய்யும் tip of #iceberg முயற்சி..

அது என்னமோ 1967 க்கு பின்னர் தான் சென்னையில் உள்ள ஏரிகளை எல்லாம் பாயில் சுருட்டி திராவிட கழகத்தில் கொள்கை கொண்டவர்கள் பூமிக்குள் எடுத்து சென்று வைத்துக்கொண்டது போலவும்
அதை மீட்க பேக் ஐடிகளை சூடிக்கொண்டு இந்து தமிழன்..

மயிலாப்பூர் தமிழன் மேற்கு மாம்பலம் தமிழன் போன்றவர்களெல்லாம் அவதாரமெடுத்து ஆவேசமாக அல்லலுற்று பதிவுகளை அங்கே சென்று இடுவதும் ஏனென்று நாம் கேள்விகளை கேட்பதும் இல்லை..

சமூகத்தளத்தில் முக்கியமாக twitter facebook போன்றவைகளில் இப்படி இயங்கும் இந்து தமிழன் மயிலாப்பூர் தமிழன் மேற்கு மாம்பலம் தமிழன் இவர்களுக்கெல்லாம் ஒரு முகம் கிடையாது என்பது மட்டுமல்ல.. தனக்கென்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் space identity என்று எதுவும் இப்படிப்பட்ட பேக் ஐடிகளுக்கு கிடையாது..

ஆனால் அவர்கள் ஒரு ஒற்றை அண்டாவில் இயங்குவார்கள்.. அதுவும் திமுக ஆட்சி செய்யும் காலத்தில். .
planned organised systematic attack on dravidam commences especially when #DMK start ruling..

ஆக திராவிடர்கள் 1967 க்குப் பிறகு ஏரிகளை எல்லாம் பாயாகச் சுருட்டிக்கொண்டு பூமிக்குள் சென்ற ஏரிகளை மீட்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பார்கள்,.

அதுவும் எப்படி மேற்கு மாம்பலத்தில் ஏரி மீது குந்திக்கொண்டு.. இந்து தமிழனாக அவதாரம் எடுத்து.. மைலாப்பூரில் ஓடிய சிற்றாறு மீது அமர்ந்து கொண்டு சாரதியாக பேக் ஐடியாக தம்மை உருமாற்றிக் கொண்டு ..

இங்கு இன்னொரு சூட்சுமத்தையும் நீங்கள் காண வேண்டும்.. இப்படி போடப்படும் பின்னூட்டங்களில் சிக்கிக்கொள்ளும் நம்மைப் போன்ற நபர்கள் எதையுமே நம்பிவிடும் மனதை கொண்டவர்கள்..
அப்படி சிக்கிய ஒருவர்தான் V Sudharsan Prince..

இந்து தமிழன் ஏரிகளை திராவிடர்கள் பாயாகச் சுருட்டிக்கொண்டு உள்ளே சென்றார்கள் என்று கதையை கம்பி கட்டும் கதையை நம்பிய நம்மை சார்ந்த ஒருவர்.. இப்போது இந்து தமிழன் வலையில்..

குட்டையை குழப்பி தானே மீன் பிடிக்க முடியும் என்ற கலை தினமலரில் வேலை செய்யவும் தினமலருக்கு மட்டுமே வேலை செய்யும் இந்து தமிழனுக்கு நன்றாக தெரியும்..

இது எப்படி இருக்கிறது என்றால் கஷ்டப்பட்டு வேட்டையாடி சிங்கம் உன்னும்.. ஆனால் பெருவாரியாக கழுதைப்புலி என சொல்லப்படும் வகை விலங்குகள் அவைகள் சிங்கம் புலி சிறுத்தைகள் உண்ட உணவுகளை மிச்சத்தை கூட்டமாக வந்து களவாடி சென்றுவிடும் தின்றுவிடும்..

இதைப் எல்லாம் படித்துவிட்டு ஏன் இந்து தமிழன் மேற்கு மாம்பலம் தமிழன் மைலாப்பூர் தமிழன் நங்கநல்லூர் தமிழன் எல்லாம் முகத்தை மறைத்துக்கொண்டு ஏன் சூட்சுமமாக திராவிடத்தை மட்டும் எதிர்க்க வேண்டும்..

என்று அப்பாவி போல தினமலரை படித்துக் கொண்டும்.. #துக்ளக் படித்துக் கொண்டும் தினமணியை படித்துக் கொண்டும் கேள்விகளை அருள்கூர்ந்து இங்கே கேட்டுவிடாதீர்கள்..

காரணம் 1967 க்குப் பின்னர் மட்டுமே ஏரிகளை பாய் போல் சுருட்டி திங்கும் திராவிட இயக்கத்தினர் சரித்திரத்தை மட்டுமே அலசும் இடம் அல்ல இது..

அதே மைலாப்பூரில் அமர்ந்துகொண்டும் மேற்கு மாம்பழங்கள் மற்றும் மயிலாப்பூரில் தின்ற ஏரிகளையும் நீர்நிலைகளையும் பற்றி அலசப் போகும் இடமிது..

உயர்சாதி 10 EWS இட ஒதுக்கீட்டின் தீமைகளை பற்றி.. அது எப்படி எல்லாம் மீதமுள்ள 97 % சார்பின் மக்களையும் பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதையெல்லாம் அலசப் போகும் இடமிது..
ஆக இந்து தமிழர்களே.. காணாமற்போன போன மாம்பழம் ஏரியை, காணாமல் போன ராதாகிருஷ்ணன் சாலை நதி நீரை இனியாவது மீட்போமா..

https://www.facebook.com/savenra/posts/7340359092656617