செங்கல்பட்டில் உள்ள HLL Biotech தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழகத்துக்கு குத்தகைக்கு தருமாறு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உச்சத்தில் இருக்கிறது. அதனை எதிர்கொள்வதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் குறிப்பாக தடுப்பூசி அனைவரும் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது.

தடுப்பூசி பொறுத்த வரையில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த தடுப்புசி போதாது என்ற நிலையில் தமிழக அரசு உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழக அரசு தம்மிடமுள்ள கட்டமைப்பை கொண்டு ஆக்ஸிஜன் போன்ற போன்றவைகளை கையிருப்பில் வைத்துள்ளன. இதனால், தடுப்பூசி தயாரிப்பில் சில நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த சூழலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசால் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் (HLL Biotech) கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால், தற்போது வரையில் ஒரு டோஸ் மருந்துகூட தயாரிக்காமல் தொடர்ந்து கிடப்பிலேயே உள்ளது.

இந்நிலையில் HLL Biotech தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழகத்துக்கு குத்தகைக்கு தருமாறு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து திமுவின் மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும், மத்திய தொழில் வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மத்திய வேதியல்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா ஆகியோரை நேரில் சந்தித்து,

செங்கல்பட்டு HLL Biotech Ltd (HBL) ஒருங்கிணைந்த தடுப்பூசி மைய நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசே குத்தகை அடிப்படையில் ஏற்று நடத்தி, அதன் வாயிலாக தடுப்பூசியினை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திமுவின் மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, “செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தை தமிழக அரசே ஏற்று நடத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து ஆலோசனை நடத்தினோம்.

தற்போது கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால் தடுப்பூசி அதிகளவில் தயாரிக்க வேண்டும் என்பதே முதல்வர் மு.க.ஸ்டாலினி%