ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.
அறிவியல் தொழில்நுட்பம் விண்வெளி

நிலவில் 4ஜி நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்ட நாசா

நிலவில் 4ஜி நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியாவுடன் ஒப்பந்தமிட்டு, 102 கோடி வழங்கியுள்ளது நாசா. 2028க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு செய்வதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ள நாசா, அதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்க, பல நிறுவனங்களுடன் 370 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 2,714 கோடி ரூபாய்) மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் நிலவில் 4ஜி/எல்டிஇ நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியாவுடன் நாசா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், மேலும் வாசிக்க …..

அரசியல் வேலைவாய்ப்புகள்

இந்திய இராணுவப் பள்ளியில் வேலைவாய்ப்பு

137 இராணுவப் பள்ளியில் யில் (Army Public School) ஆசிரியர்ககளுக்கான பணியிடங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் : http://aps-csb.in/ விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான விவரங்களை அறிய : http://aps-csb.in/PdfDocuments/RegisterStep.pdf கடைசி தேதி : 20-10-2020 மாலை 5.00 வரை பணி : ஆசிரியர் காலியிடங்கள் : 8000 வயது வரம்பு : அனுபவம் இல்லாதவர்களுக்கு 40 வயதுக்குள்ளும் அனுபவம் உள்ளவர்களுக்கு 50 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும் கல்வித் தகுதி : Diploma, Master’s Degree, மேலும் வாசிக்க …..

இயற்கை

தமிழகத்தில் அக்டோபர் 19 முதல் 21 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அக்டோபர் 19 முதல் 21 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதன் மேலும் வாசிக்க …..

சமூகம்

தனது சகோதரனை உயிருடன் சவப்பெட்டியில் வைத்த கொடூரம்.. முதியவர் பரிதாப மரணம்

உயிருடன் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு மீட்கப்பட்ட முதியவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் உள்ள பழைய வீட்டு வசதி வாரிய வளாகத்தில் பாலசுப்ரமணியம் (வயது 74), அவரது சகோதரர் சரவணன் (வயது 70), அவரது மனைவி, மகள்கள் கீதா, ஜெயஸ்ரீ ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக உடல் நலமில்லாமல் இருக்கும் பாலசுப்ரமணியம் இறந்து விட்டதாகக் கூறி சடலம் வைக்க பயன்படுத்தப்படும் தனியார் குளிர் பெட்டியை வாடகைக்கு மேலும் வாசிக்க …..

சமூகம்

மக்கள் பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் அதிர்ச்சியூட்டும் இடத்தில் இந்தியா

உலக அளவில் அதிக மக்கள் பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் 94-வது இடத்தில் உள்ளதாக உலகளாவிய பசி மதிப்பீடு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், உலக மக்களின் பசியைக் குறைத்து முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும், மக்களின் உணவுப் பற்றாக்குறையை மதிப்பிடுவதற்காகவும் உலகளாவிய பசி மதிப்பீடு என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. குழந்தைகளுக்குத் தேவையான சத்துள்ள சரிவிகித உணவு கிடைக்கிறதா என்றும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வயதிற்கு மேலும் வாசிக்க …..

அரசியல்

இலங்கையில் பிறந்தது எனது தவறா… முத்தையா முரளிதரன் ஆதங்கம்

‘800’ பட சர்ச்சை விவகாரத்தில் இலங்கையில் பிறந்தது எனது தவறா என கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார். 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து கொண்டிருக்கிறார். ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர் முத்தையா முரளிதரன், எனவே அவர் குறித்து படத்தில் நடிக்கக் கூடாது என தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், இயக்குநர் பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

தனது தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கை நிராகரிக்கக் கோரி, எம்.பி.ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், மற்ற அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. தேனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளரான ஓபிஎஸ் மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

‘800’ படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறான ‘800’ படத்தில் நடிக்காமல் விஜய் சேதுபதி தவிர்க்க வேண்டும் என்று, கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜா, தமிழ்தேசியவாதிகள், படைப்பாளிகள் மற்றும் அரசியல் கட்சியினர் என பலரும் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து வைரமுத்து தனது பதிவில், “கலையாளர் விஜய் சேதுபதிக்கு… சில நேரங்களில் செய்து எய்தும் புகழைவிடச் செய்யாமல் எய்தும் புகழே பெரிதினும் பெரிது செய்யும். நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள். வளர்பிறையில் கறை எதற்கு? இன உரிமைக்காகக் கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம்; மேலும் வாசிக்க …..

கொரானா தேசியம்

பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் இந்தியாவை விட சிறப்பாக செயல்படுகின்றன- ட்ரெண்டான ராகுல் ட்வீட்

கொரோனாவை கையாள்வதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2020 – 2021ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் மைனஸ் 10.3% குறைய வாய்ப்புள்ளது என சர்வதேச நிதியகம் தெரிவித்துள்ளது. மேலும், சீனா, மியான்மர், நேபாளம், பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதில், அதிகளவு பாதிப்பு இந்தியாவிற்கு மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம்

ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது – மத்திய அரசு திட்டவட்டம்

மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு வழங்க முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப் படிப்புகளில் இருந்து 15% இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50% இடங்களும் அகில இந்திய ஒதுக்கீடு என்ற வகையில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இதேபோல், மற்ற மாநிலங்களும் வழங்குகின்றன. இந்நிலையில், இந்த இடங்களில் 50% ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடாக வழங்க உத்தரவிடக் கோரி, மேலும் வாசிக்க …..