மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.
இந்நிலையில் வாக்காளர்கள், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பயன்பெறும் வகையில் தேர்தல் ஆணையம் செயலிகள் மற்றும் இணையதளங்களை வெளியிட்டுள்ளது. அதன் தொகுப்பின் விவரம் இதோ :
இலவச அழைப்பு எண் 1950
வாக்காளர்கள் இலவச அழைப்பு எண்ணான 1950 என்ற எண்ணை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.
Election monitoring dashboard இணையம்
தேர்தல் நடைபெறும் போது வாக்குச்சாவடிகளின் நிலவரங்கள் உடனுக்குடன் தேர்தல் ஆணையத்திற்கு Election monitoring dashboard என்ற இணையம் வழியாக பதிவிடப்படுகின்றன. மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் பல மாநிலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சுழற்சி முறையை கணினி சார்ந்த நெறிமுறையை கொண்டு தேர்தல் ஆணையம் எளிதாக செய்கிறது.
Sugam இணையம்
தேர்தலின் போது பயன்படுத்தப்படும் வாகனங்களின் தரவுகளை நிர்வகிக்க Sugam என்ற இணையத்தை ஆணையம் பயன்படுத்துகிறது.
Suvidha இணையம்
அரசியல் கட்சிகள் பரப்புரை செய்வதற்கான அனுமதியை சுவிதா என்ற இணையதளம் வாயிலாகவும் பெறலாம்.
C-Vigil செயலி
தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டால் பொதுமக்கள் எளிதில் புகார் அளிக்கும் வகையில் C-Vigil என்ற ஆண்டிராயிட் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. விதிமீறர்களில் ஈடுபடும் நபர்கள் மீதோ கட்சிகளின் மீதோ இந்த செயலி வாயிலாக புகார் அளிக்கலாம். புகார் அளிக்கப்பட்டு 1.30 மணி நேரத்திற்குள் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்ள் குறித்து புகார் அளித்தவரிடம் தெரிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Voter helpline mobile செயலி
Voter helpline mobile ஆப் எனப்படும் செயலியின் மூலம் வாக்காளர்கள் பெயர் சரி பார்த்தல், புதிய வாக்காளர் சேர்க்கை, லஞ்ச ஒழிப்பு, தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்புகள் ஆகியவற்றை எளிதில் அறிய முடிகிறது.
Suvidha செயலி
Suvidha செயலி மூலம் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்கள் அங்கீகரிக்கப்பட்டனவா என அறிய முடியும்.
சமாதன் செயலி
வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான பரிந்துரைகள், புகார்கள் அளிக்க சமாதன் என்ற செயலியை பயன்படுத்தலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த செயலியின் மூலம் புகார்கள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவது சிறப்பு அம்சமாகும்.