“பிக் பாஸ்” புகழ் ஹரிஷ் கல்யாண் – ரெய்சா ஜோடி நடிக்க இளன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசை மற்றும் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பியார் பிரேமா காதல்.”

ஆரம்பத்தில் காதல் ,கல்யாணம், என வலியுறுத்திய ஹீரோ லிவிங் டூ கெதர் லைப்புக்கு மாறத் துடிப்பதும் ., லிவிங் டூ கெதர் லைப் தான் வசதி என வாழ்ந்த நாயகி, இறுதியில் திருமண வாழ்க்கையை தேர்ந்தெடுக்க விரும்புவதும் தான் இப்படக்கரு.

ஸ்ரீகுமார்-ஹரிஷ் கல்யாணும் , சிந்துஜா – ரெய்சாவும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கின்றனர்.ஹரிஷ்க்கு முதன்முதலாக ரெய்சாவை கண்டதுமே காதல். ஆனால், ரெய்சாவுக்கு காதல் கத்திரிக்காய் எல்லாம் பிடிக்காது. எடுத்த எடுப்பிலேயே ஹரிஷ் கல்யாணுடன் செக்ஸில் ஈடுபடும் ரெய்சா, அதன் பிறகு ப்ரண்ட்ஷிப்பாய்இருக்கலாம என்கிறார். அதை ஏற்க மறுக்கும் ஹரிஷ் ., தான் ரெய்சா வை காதலிப்பதாக திரும்ப திரும்பக் கூற, நோ… ப்ரண்ட்ஷிப் எனும் ரெய்சா ஒரு கட்டத்தில் ஹரீஷின் காதலுக்கு ஓ.கே சொல்லி தனக்கு ஒருலட்சியம் இருப்பதால் கல்யாணம் பற்றி பேசவே கூடாது …. லிவிங் டூ கெதர் ஜோடியாக ஒரே வீட்டில் இருவரும் வாழலாம் என்கிறார்.

அதற்கு ஓ.கே சொல்லும் ஹரிஷ், ரெய்சாவுடன் சேர்ந்து ஒரே வீட்டில் தன் வீட்டிற்கு தெரியாமல் வாழ ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் உடல் நிலை முடியாத தன் தாய்க்காக திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும் ஹரிஷ், ரெய்சா வை திருமணத்திற்கு சம்மதிக்கும் படி கேட்கிறார். அதற்கு தன் ஹோட்டல் லட்சியத்தை சொல்லி திருமணத்திற்கு ரெய்சா மறுக்க, வேறு ஒரு பெண்ணை ஹரிஷ் திருமணம் செய்து கொள்ள ரெய்சா தன் எல்லை பகுதியில் ஹோட்டல் வைக்க வேண்டும் … எனும் லட்சியத்தில் மூழ்குகிறார். இருவரும் தங்கள் காதலை மறந்து விரும்பிய வாழ்க்கையை விரும்பியபடி வாழ்ந்தார்களா? மீண்டும் சந்தித்தனரா? இல்லையா? என்பது தான் “பியார் பிரேமா காதல்” படத்தின் வித்தியாசமும், நவீனமுமான கதையும் , களமும்.

படத்தில் சில சீன்கள் கலாச்சார சீரழிவை ஏற்படுத்துவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன. இப்படம் பற்றி இயக்குநர் சுசிந்திரன் கூறுகையில், முதல் தயாரிப்பிலேயே யுவன் வெற்றி பெற்றுள்ளார். இயக்குநர் தன் வசனங்கள் மூலம் காட்சிகளை சுவாரஸ்யப்படுத்தியுள்ளார். படத்தின் பலம் யுவன் இசை மற்றும் ஹரிஷ் கல்யானின் எதார்த்த நடிப்பு.

இப்படத்தை கலாச்சார சீரழிவு என்றும் கூறலாம். மொத்தத்தில் இளைஞர்களுக்கான ஒரு வெற்றி படத்தை தந்துள்ளனர்”, என்று தெரிவித்துள்ளார்.