நம்மில் பலரும் போன் லெஸ் (Bone-less) வகையிலான சதை பகுதி இறைச்சிகளை தான் விரும்பி சாப்பிடுவோம். அதில் ருசியும் கொழுப்பும் மட்டும் தான் இருக்கிறதே தவிர மற்றபடி பெரிதாய் எந்த ஆரோக்கியமும் இல்லை.
ஆனால், உறுப்பு பகுதி இறைச்சிகளான குடல், ஈரல், மூளை, கணையம், மண்ணீரல் போன்றவற்றில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.
முக்கியமாக இவற்றில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, புரதம், இரும்புச்சத்து, கிரோமியம், ஃபோலிக் அமிலம் போன்ற உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் அதிகமான அளவில் கிடைகின்றன. மற்றும் உங்களது சீரான உடல் இயக்கத்தையும் இது ஊக்குவிக்கிறது.
சரி இனி வெறும் சதை இறைச்சியை உண்பதை விட உறுப்பு பகுதிகளை உண்பதன் மூலம் கிடைக்கின்ற ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்…
சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அப்படி ஒரு ருசியாக இருக்கும். அப்படி ருசிகூடிய மட்டன் குடல் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
ஆட்டு குடல் – 750 கிராம்
வெங்காயம் – 4
தக்காளி – 4
தேங்காய் – ஒரு மூடி அரைத்தது (கசகசாவுடன் )
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா – கொஞ்சம்
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
கரம் மசாலா – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி, புதினா – தேவையான அளவு
[su_label type=”important”]செய்முறை :[/su_label]
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஆட்டுக்குடலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.(தயிர், மஞ்சள் போட்டு கழுவிக்கொள்ள வேண்டும்)
குக்கரில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, மஞ்சள் தூள் சிறிது போட்டு குடலுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி (கொஞ்சம் தாராளமாக ) பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்த பின் நறுக்கின வெங்காயதை போட்டு வதக்கி கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
அடுத்து இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து மைய வதக்கவும்.
இப்பொழுது மிளகாய் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
அடுத்து வேக வைத்த குடலை போடவும்.
நன்றாக கொதி வரும் போது அதில் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
ஓரங்களில் எண்ணெய் பிரிந்து தொக்கு பதம் வரும் போது கொத்தமல்லி, புதினா தழை தூவி இறக்கி பரிமாறலாம்.
இட்லிக்கு சரியான டிஷ் இந்த மட்டன் குடல் குழம்பு தான்.
மனமிகு இலகுவான மட்டன் குழம்பு செய்தாச்சி .. சாப்பிட்டாச்சி .. முன்னோர்கள் நமக்கு இதன் பலன்கள் என்ன என்ன என சொல்லி இருக்கிறார்கள் பார்ப்போமா ..
ஆட்டு குடல் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதில் இருக்கும் ஜெலட்டின் மற்றும் புரோபயாடிக்குகள் செரிமான கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.