தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்துக்கு எதிராக ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் ஆபாச படங்களை வெளியிட்டு தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகையே அதிரவைத்தார்.
இம்முறை ஸ்ரீரெட்டி சினிமா பிரபலங்கள் மீது புகார் கூறாமல், பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பற்றி அவர் பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவர் பாகுபலி புகழ் ராணாவின் தம்பி, நடிகர் நானி, தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீதும் அடுத்ததடுத்து புகார் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக ஸ்ரீரெட்டி மீது வழக்கும் தொடரப்பட்டது.
தற்போது அவரது கதை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் தமிழில் சினிமாவாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் அவரே நாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில் தற்போது அவரின் அடுத்த பாலியல் புகாரில் சச்சின் டெண்டுல்கர் என குறிப்பிட்டுள்ளார். சம்பந்தப்பட்டவர்களை இதுவரை நேரடியாக பெயர் குறிப்பிட்டு தாக்கி வந்த ஸ்ரீரெட்டி, சச்சின் விவகாரத்தில் மட்டும் மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார். அதோடு, இப்பதிவில் தன்னைப் பற்றி அவர் கூறாமல் மற்றொரு நடிகை பற்றி அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “சச்சின் டெண்டுல்கர் ஒரு ரொமாண்டிக்கான ஆள், ஹைதராபாத் வந்த போது, “சார்மி’ங் ஆன பெண்ணை சந்தித்தார். அதற்கு, சாமுண்டேஸ்வர் சாமி என்பவர் உடந்தை” எனத் தெரிவித்துள்ளார். இதில் சார்மிங் பெண் என அவர் குறிப்பிடுவது நடிகை சார்மி எனக் கூறப்படுகிறது.
ஸ்ரீரெட்டியின் இந்தப் புகார் தொடர்பாக சச்சின் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித மறுப்போ அல்லது பதிலோ வரவில்லை. ஆனால், சச்சின் மீது ஸ்ரீரெட்டி இப்படி பாலியல் புகார் கூறியிருப்பது அவரது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்பு செய்திக்கு: ரெட்டி டைரியில் ரகசிய கேமரா காட்சிகள்