பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை கொண்டது அதிர்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட் செய்துள்ளார்.
34 வயதான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் பிகார் மாநிலத்தை சேர்ந்தவர். இந்தி தொலைக்காட்சி தொடர்களில் மூலமாக புகழ் பெற்று அதற்கு பிறகு சினிமாவில் களமிறங்கியவர். 2016ல் இவர் நடித்த தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான M.S. Dhoni: The Untold Story என்ற படத்தின் மூலம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் மும்பையில் உள்ள தன் வீட்டில் தனிமையில் இருந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சுஷாந்த் எதிர்பாராத வகையில் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து பிரதமர் மோடி உட்பட கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், மேலும் பல விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சுஷாந்த் சிங் பீகாரில் செல்வாக்குமிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தவர். பீகாரின் மோகமா சட்டசபை தொகுதியில் சுஷாந்த் சிங்கின் சகோதரர் நீரஜ் குமார் சிங் பாப்லு, 2005, 2010 மற்றும் 2015 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தொடர் வெற்றி பெற்றவர். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்த நீரஜ்குமார், பின்னர் 12 அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க: மதுக்கடத்தலில் போலீசிடம் சிக்கிய நடிகை ரம்யா கிருஷ்ணனின் கார்..