கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்திய பிறகு உலக சுகாதார அமைப்பிலிருந்து பிரேசில் விலகப்போவதாக அறிவித்துள்ளது. மேலும் அரசியல் சார்புடைய அமைப்பாக இருப்பதை உலக சுகாதார அமைப்பு நிறுத்த வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75 லட்சத்தை எட்டியுள்ளது. இதுவரை 4,14,023 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 36,17,993 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். உலக நாடுகளில் அமெரிக்காவில் தான் மிக மோசமான பாதிப்பு இருந்து வருகிறது.

அமெரிக்காவை தொடர்ந்து கொரோனா மிக அதிகமாக பாதித்து வரும் நாடாக பிரேசில் உள்ளது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 31,197 பேருக்கு கொரோனா உறுதியானது. ஒருநாள் கொரோனா பாதிப்பு, மரணங்களில் பிரேசில் தான் முதலிடத்தில் இருக்கிறது. பிரேசிலில் ஒரே நாளில் மட்டும் 31,197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி, 1,185 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,42,084 ஆக உள்ளது.

இந்நிலையில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ தனது அறிவிப்பில், உலக சுகாதார அமைப்பு ‘அரசியல் சார்புடைய அமைப்பாக’ இருப்பதாக குற்றம்சாட்டி, கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்திய பிறகு உலக சுகாதார அமைப்பிலிருந்து பிரேசில் விலகப்போவதாக அறிவித்துள்ளதார்.

மேலும் வாசிக்க: கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகள் திறக்காது; அதிரடி அறிவிப்பு வெளியிட்ட நாடு

முன்னதாக கிருமித்தொற்று, பொதுச் சுகாதார ஆபத்தை விட, நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாக கூறி ஊரடங்கை தளர்த்துவதாக அதிபர் போல்சொனாரோ அறிவித்திருந்தார்.

இதுகுறித்து கருது தெரிவித்த உலக சுகாதார அமைப்பு, தென் அமெரிக்காவில் நிலவும் கிருமித்தொற்று பாதிப்பு அக்கறைக்குரியது என்றும், கிருமிப் பரவல் மெதுவடைவதற்கு முன் முடக்க நடவடிக்கைகளை நீக்கவேண்டாம் என்றும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.