உலக பொருளாதார மன்றத்தின் (WEF) வருடாந்தர கூட்டத்தின் 5 நாள் கூட்டத்தில் சர்வதேச உரிமை குழு ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கையை வெளியிட்டு கூறிய விவரம் பின்வருமாறு :
 
இந்தியாவின் முதல் 9 கோடீசுவரர்களின் செல்வம் நாட்டின் 50 சதவிகித மக்களின் செல்வத்திற்கு சமமானதாகும் என ஆக்ஸ்பாம் அறிக்கை கூறி உள்ளது.
 
சில செல்வந்தர்கள் இந்தியாவின் செல்வத்தின்பெரும் பங்கைக் குவித்து வருகிறார்கள். ஏழைகள் அவர்களின் அடுத்தவேளை உணவு சாப்பிட அல்லது அவர்களது குழந்தையின் மருத்துவத்திற்கு பணம் கொடுக்க முடியாமல் திண்டாடுகிறார்கள்.
 
இந்திய கோடீசுவரர்கள் கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு 2,200 கோடி ரூபாய் வரை ஈட்டி உள்ளனர். கடந்த ஆண்டு நாட்டின் மிக உயர்மட்டத்தில் உள்ள பணக்காரர்களின் எண்ணிக்கையில் 1 சதவீதம் இந்தியாவின் செல்வத்தின் 39 சதவீதமாக உள்ளது.
 
ஆனால் மக்கள் தொகையில் அரைவாசிக்கும் அதிகம் கீழே இருப்பவர்கள் செல்வம் 3 சதவீதம் அதிகரித்து உள்ளது. உலகெங்கிலும், கோடீசுவரர்களின் வருவாயானது 2018 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 12 சதவீதம் அல்லது 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
 
அதேசமயம் உலக மக்கள்தொகையில் ஏழ்மையான நிலையில் பாதிபேர் 11 சதவிகிதம் தங்கள் செல்வத்தை இழந்து உள்ளனர். நாட்டில் 10 சதவீதம் 13.6 கோடி இந்தியர்கள் மிகவும் ஏழைகளாக உள்ளனர். 2004 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கடனிலேயே இருக்கிறார்கள்.
 
வளர்ந்து வரும் பணக்கார மற்றும் ஏழை வித்தியாசத்தை சமாளிக்க அவசர நடவடிக்கைகளை எடுக்க உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த அரசியல் மற்றும் வணிகத் தலைவர்களைக் ஒக்ஸ்பாம் கேட்டுக் கொண்டது.
 
உலகின் மிகப்பெரிய பணக்காரரான ஜெஃப் பெஸோஸ், அமேசான் நிறுவனத்தை நிறுவியவர், அவரது செல்வத்தின் மதிப்பு 112 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது. அவருடைய சொத்துக்களில் 1 சதவிகிதம் மட்டுமே 115 மில்லியன் மக்கள் வாழும் எதியோப்பியாவின் முழு சுகாதார வரவு செலவு திட்டத்திற்கும் சமமானதாகும்.
 
இந்திய மக்கள் தொகையில் 10 சதவீத மக்கள் மொத்த தேசிய செல்வத்தில் 77.4 சதவீதத்தை வைத்துள்ளனர். இந்திய பணக்காரர்கள் ஒரு சதவீதம் பேர் இந்தியாவின் மொத்த செலவத்தை 51.53 சதவீதத்தை கொண்டுள்ளனர்.
 
60 சதவிகிதத்திற்கும் குறைவான மக்கள் நாட்டின் செல்வத்தில் வெறும் 4.8 சதவிகிதம்தான் வைத்துள்ளனர். உயர்மட்ட 9 கோடீசுவரர்களின் செல்வம், மக்கள் தொகையில் 50 சதவிகித செல்வங்களுக்கு சமமானதாகும்.
கிரெடிட் சுவிஸ் உலக டேட்டா புத்தகம் மற்றும் ஆண்டு போர்ப்ஸ் பில்லியனர்கள் விரிவான தரவு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடந்து உள்ளதாக ஆக்ஸ்பாம் தெரிவித்து உள்ளது.
 
ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் வின்னீ பைன் சொல்கிறார் “அதிகரித்துவரும் சமத்துவமின்மை, வறுமை, சேதமடைந்த பொருளாதாரங்கள் மற்றும் உலகம் முழுவதும் பொதுமக்கள் கோபத்தை அதிகரித்து போராட்டத்தை உருவாக்கும் . சில செல்வந்தர்கள் இந்தியாவின் செல்வத்தின் வளர்ந்துவரும் பெரும் பங்கை குவித்து வருகின்றனர், அதே நேரத்தில் ஏழைகளிடம் அவர்களின் அடுத்த வேளை உணவு அல்லது தங்கள் குழந்தையின் மருந்துகள் வாங்க பணம் இல்லை.
 
இந்த அசாதாரண சமத்துவமின்மை இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு இடையே தொடர்ந்தால், அது நாட்டின் சமூக மற்றும் ஜனநாயக கட்டமைப்பின் முழு சரிவாகும் என கூறினார்.
 
ஒக்ஸ்பாம் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் பிகார் கூறும்போது, ஆழ்ந்த பொருளாதார சமத்துவமின்மையால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த ஆய்வு பொதுச்சேவைகளுக்கு நிதி வழங்குவதன் மூலம் அரசாங்கங்கள் சமத்துவமின்மையை அதிகரிக்கின்றன என்பதை காட்டுகிறது என்று கூறினார்.