சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரூ 10 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டிருந்தது. இந்த திட்டத்துக்கு சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இருந்து 1,900 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதை எதிர்த்து விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கின் மீது இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது.
இதுகுறித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் எனவும் .,
கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து யாரும் பாதிக்காத வகையில் முதல்வர் முடிவு எடுப்பார் எனவும் தெரிவித்தார்
மேலும் எடப்பாடியை எதிர்க்கும் அரசியல் இயக்கம் டெட்பாடியாக உள்ளது என்றும் எகத்தாளாமாக பேசினார் அதிமுக அமைச்சர்.
எந்த அரசியல் கட்சியும் உயிருள்ள இயக்கமாக இல்லை. மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் தினகரனுக்கு துளியும் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஸ்டாலின் திமுக தலைவரானார் என்றும் கிண்டல் அடித்து விட்டு சிரித்தார் ..
ஆனால் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாமகவோ இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளது. மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதீர் என அரசிடம் வலியுறுத்துவோம் என அன்புமணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.