அரசு அதிகாரிகளைவிட சங்பரிவார் அமைப்பினரை சந்திப்பதே தனக்கு முக்கியம் என்று கூறி கர்நாடக அமைச்சர் ஒருவருடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையாகியுள்ளது.
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வில் ஈடுபட்டார். பின்னர் மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுடன் செய்தியாளர்களையும், பாரதிய ஜனதா பிரமுகர்களையும் சந்திக்க முற்பட்டார்.
அப்போது குறுக்கிட்ட உள்ளூர் அமைச்சர் முதலில் கள அதிகாரிகளை சந்தித்துவிடலாம், அவர்களை சந்தித்துவிட்டால் அவர்கள் களப்பணிக்கு செல்ல ஏதுவாக இருக்கும் என்றார்.
இதனால் ஆவேசமடைந்த நிர்மலா ஒரு உள்ளூர் அமைச்சர் தனக்கு கட்டளையிடுவதா? உங்களுக்கு அரசும், அதிகாரிகளும் முக்கியம் என்றால் தனக்கு சங்பரிவார்தான் முக்கியம் என்றார். நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. ஒரு மத்திய அமைச்சர் பதவியில் இருப்பவர் ஒரு மாநில அரசையும், மாநில அரசு பணிகளையும் உதாசீனப்படுத்தி தான் சார்ந்துள்ள அமைப்பை முன்னிறுத்தி பேசியுள்ளது கடும் கண்டனத்திற்கும் உள்ளாக்கி இருக்கிறது.
இதனை கண்டித்து அம்மாநில துணை முதல்வர் பரமேஸ்வரா கடும் கண்டனத்தை பாதுகாபு அமைசர்க்கு தெரிவித்து ட்வித் செய்து உள்ளத்தால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது