மோடி மீதான ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டு பூதாகரமாக உருவெடுத்த நிலையில், அதை திசைதிருப்ப என்னவெல்லாமோ தந்திரங்களை கையாள்கிறார்.
 
ஆனால் அத்தனையும் மோடிக்கு அவப்பெயரையே தருவதால் என்ன செயவது என புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளனர் பாஜகவினர் என்கிறது அக்கட்சி வட்டாரம்
 
காங்கிரஸ் தரப்பில் வறுமைக்கு எதிரான இறுதித் தாக்குதல் என்ற அறைகூவலோடு, உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு 5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த குறைந்தபட்சம் 25 கோடி பேர் பயனடைகிற வகையில் குடும்பத்துக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வருவாய் உத்தரவாத திட்டம் அறிவிக்கப்பட்டது.
 
இந்தத் திட்டம் சாத்தியம்தான் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம் ராஜனும் தெளிவுபடுத்தினார்.
 
இதையடுத்து மோடியும் பாஜக தலைவர்களும் அந்தப் பேட்டி முடிந்த அரை மணி நேரத்தில் தொலைக்காட்சி மற்றும் ரேடியோவில் அவசர அறிவிப்பு வெளியிடப்போவதாக மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
 
இதையடுத்து நாடுமுழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. காரணம் இது போல தான் திடீர் அறிவிப்பாகத்தான் பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டு இந்திய மக்களை மிகப்பெரிய நெருக்கடியில் சிக்க வைத்தார்.
 
அதுபோல திடீரென்று வேறு ஏதேனும் சிக்கலில் மாட்டிவிடப்போகிறாரோ என்று மக்கள் பதற்றமடைந்தனர். தொலைக்காட்சிகளோ பிரேக்கிங் போட்டு இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்தன.
 
ஆனால், தொலைக்காட்சியில் தோன்றிய மோடி, இந்தியா விண்வெளி யுத்தத்திற்கு தயாராகிவிட்டது என்று வழக்கம் போல தேர்தல் மேடையில் பேசியது போலவே பேசினார்.
 
ஆனால் அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவருடைய பேச்சை கிண்டலடித்தும், விமர்சித்தும் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வர தொடங்கின.
 
விண்வெளித்துறை . கடந்த 70 ஆண்டுகளாக விண்வெளி ஆய்வு மையம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது.
 
அந்தச் சாதனைகளையெல்லாம் டிஆர்டிஓவின் அதிகாரிகள்தான் வெளியிடுவார்கள். குடியரசுத்தலைவரும் பிரதமரும் மற்ற அரசியல் தலைவர்களும் வாழ்த்துத் தெரிவிப்பார்கள்.
 
ஆனால், தற்போது ராணுவத்தின் திடீர் தாக்குதலாக இருந்தாலும், விண்வெளித்துறையின் சாதனை என்றாலும் பிரதமர் தனது சாதனையைப் போல பேசும் பழக்கம் மோடியிடம் மட்டுமே இருந்து வருகிறது ..
 
மேலும் தேர்தல் விதிகள் அமுலுக்கு வந்த பின்னர் மோடியின் இந்த நடவடிக்கை தேர்தல் விதிமுறைகளை மீறியது என்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தொலைக்காட்சியையோ, ரேடியோவையோ பிரதமர் பயன்படுத்தக்கூடாது. ஆனால், அந்த விதியையும் மோடி மீறியிருக்கிறார் என்று கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் கொடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையமும் இதனை விசாரிக்க போவதாக அறிவித்து உள்ளது ..
 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்ததற்கு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டிஆர்டிஓவுக்கு வாழ்த்துக்கள்.
 
உங்களுடைய பணியால் மிகவும் பெருமையடைகிறோம்… பிரதமருக்கு உலக நாடக தின வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
 
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், வேலைவாய்ப்பு பிரச்சனை, கிராமப்புற பிரச்சனைகள், பெண்கள் பாதுகாப்பு ஆகிய விவகாரங்களில் இருந்து நாட்டு மக்களை திசைத்திருப்ப வானத்தை நோக்கி பிரதமர் மோடி கையை காட்டியுள்ளார்.
 
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இஸ்ரோவிற்கு வாழ்த்துக்கள், இந்த வெற்றி உங்களுக்கானது. இந்தியாவை பாதுகாப்பான நாடாக உருவாக்குகிறீர்கள் என பதிவிட்டுள்ளார்.
 
மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள டுவிட் செய்திகளில், இந்தியாவின் விண்வெளிதிட்டம் எப்போதும் உலக தரம் வாய்ந்ததாக பல ஆண்டுகளாக இருக்கிறது.
 
இந்திய விஞ்ஞானிகள், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பிற ஆய்வு நிறுவனங்களால் நாம் பெருமையடைகிறோம். விண்வெளி ஆய்வு மற்றும் மேம்பாடு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி வழக்கம்போல எல்லாவற்றுக்கும்தான் தான் என பாராட்டை தனதாக்குகிறார்.
 
உண்மையில் பாராட்டு நம்முடைய ஆராய்ச்சியாளர்களுக்குதான். இன்றைய அறிவிப்பு ஒரு வரம்பற்ற நாடகமாகும்,  இப்போது தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டு தனக்கும், தனது அரசுக்கும் மகுடம் சூட்டிக் கொள்ள முயற்சி செய்கிறார்.
 
இது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயலாகும். இந்த அரசாங்கம் காலாவதியாகி விட்டது.இந்த நிலையில் இப்படியொரு அறிவிப்பை வெளியிட வேண்டிய அவசரமும் கிடையாது.
 
இது மூழ்கிக் கொண்டிருக்கும் பா.ஜனதா என்னும் கப்பலுக்கு ஆக்ஸிஜன் செலுத்தும் அவசரமாகவே தெரிகிறது. தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பாக புகார் தெரிவிக்க இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். 
 
முன்னதாக 44 இந்திய வீரர்களை பலி கொடுத்த நிகழ்வில் இந்தியாவில் முதல்முறையாக சொந்த பிரதமரை கிண்டலடித்து, பாகிஸ்தான் பிரதமரின் சமாதான முயற்சியை இந்திய மக்கள் பாராட்டும் நிலை உருவாகியது வேறு மோடி அரசை கடும் நெருக்கடியில் தள்ளியது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்