‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் நடித்த முதல் படமே வெற்றிபெறவில்லை. இருந்தாலும் தளராமல் அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.
இந்நிலையில் இந்த 2018 ம் ஆண்டில் கீர்த்தி சுரேஷ், அதிகமாக 7 படங்களில் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் “தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சர்கார், சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2” ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் சீமராஜா படத்தில் கவுரவ வேடத்திலும் நடித்தார். இது தவிர ‘அக்னியாதவாசி’ என்ற தெலுங்கு படமும் அவர் நடிப்பில் வெளியானது.
இவரை அடுத்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “லட்சுமி, சாமி 2, வட சென்னை, செக்க சிவந்த வானம், கனா ஆகிய ஐந்து படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக நடிகை வரலட்சுமியும் ஐந்து படங்களில் நடித்துள்ளார். அவர் “சந்திரமவுலி, சர்கார், சண்டக்கோழி 2, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், மாரி 2” ஆகிய படங்களில் வில்லி, குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
இதனால் 2018 -ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்தவர்கள் என்ற பெருமையை 3 கதாநாயகிகள் பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடுத்து சமந்தா, சாயிஷா, ஜோதிகா ஆகியோர் தலா 3 படங்களிலும் மற்ற நடிகைகள் குறைந்தது 2 படங்களிலும் நடித்துள்ளனர்.
இந்த ஆண்டு அதிக படங்களில் கதாநாயகியாக நடித்ததோடு மட்டுமல்லாமல் அதிக வெற்றி படங்களை கொடுத்ததும் கீர்த்தி சுரேஷ். கடந்த சில ஆண்டுகளாக இந்த பெருமைக்குரியவராய் இருந்த நயன்தாரா இந்த ஆண்டு ஜெய் சிம்ஹா என்ற தெலுங்கு படம் உட்பட 3 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தமிழில் இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா இரண்டுமே நயன்தாரா முதன்மை வேடத்தில் நடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.