இது வரை சுமார் அயிரம் corporate கம்பெனிக்கும் மேலே சுமார் 8 லட்சம் கோடி வரை வாரா கடனாகி விட .,
மோடி தலைமையில் பாஜக ஆட்சியில் நிரவ் மோடி ,லலித் மோடி ,மல்லையா, உள்ளிட்ட தொழில் அதிபர்கள் இது வரை 80000 கோடிக்கு மேல கடன் வைத்து விட்டும் இந்தியாவை விட்டு ஓடி விட .,
இப்போது 5 கோடி ஏழைகளுக்கு 3.6 லட்சம் கோடி வருடம் தரப்படும் என்ற காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டும் பாஜகவினர் பலரும் கால்குலேட்டர் வைத்து கொண்டு துடிப்பதை சமூக வலைதளத்திலே கண் கூடாக காணும் நிலையில்.,
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பேசும் விஷயம் வெறும் 5 கோடி ஏழைகள் அல்ல ..அந்த 5 கோடியை சுற்றி உள்ள 20 கோடி மக்களும் பயன் பெறுவார் ..இந்தியாவில் ஓட்டு போடும் ஜனநாயக மக்கள் தொகை கணக்கில் விகிதத்தில் இது கிட்டதட்ட 23% ஆகும் ..
இப்படி வருடம் 72000ரூ பணத்தை வைத்து கொண்டு முதலீடாக அவர்கள் பின்தங்கிய ஏழைகள் குறு தொழிலும் தொடங்கலாம் ..
தங்கள் குடும்பம் மேலும் வசதி பெற அவர்கள் இதனை பயன் படுத்தியும் கொள்ளலாம் காரணம் இந்த பணத்தில் வட்டி கட்ட வேண்டியது இல்லை திருப்பி தரவும் தேவை இல்லை..
பிரதமர் மோடியின் முத்ரா திட்டத்தில் வட்டிக்கு பணம் கொடுக்கும் திட்டத்தில் இது வரை 13000 கோடி வரை வராத பணமாக ஆகி விட்டது என்ற வங்கியின் RTI பதிலும் இங்கே நாம் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டியதாகி உள்ளது..
மக்களவை தேர்தலை முன்னிட்டு, சிறு, குறு விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி இடைக்கால பட்ஜெட்டில் கொண்டு வந்தார்.
அதற்கு போட்டியாக தான் தற்போது ராகுல் காந்தி, ஏழை குடும்பங்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் ‘நியூனதம் அய் யோஜனா’ திட்டத்தை அறிவித்துள்ளார் என்ற குற்றசாட்டையும் பாஜகவினர் வைத்து உள்ளதால் இரு திட்டதின் மீது ஒரு பார்வையை வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டுள்ளது .
பாஜக வின் திட்டம் – ஓரு பார்வை
* மாதம் 500 வீதம் ஆண்டுக்கு 6,000 நிதியுதவி
* பயனாளிகள் 12 கோடி விவசாயிகள்.
* 2 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்திருப்பவர்கள்.
* மூன்று தவணையாக தலா 2,000 வழங்கப்படும்.
ராகுலின் திட்டம் – ஒர் பார்வை
* மாதம் 6,000 வீதம் ஆண்டுக்கு 72,000 நிதி உதவி
* 25 கோடி ஏழை மக்கள் நேரடி பயனாளிகள்.
* வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து ஏழைகள்.
இதன் மூலம் ஏழைகள் குடும்ப வருமானம் ஆக உயரும்
மூன்று மாதத்தில் ஒருவருக்கு 2000 ருபாய் இன்றயை நிலவரத்தின் படி எதையும் செய்ய முடியாது என்பது திட்டவட்டம் ..
ஒரு திட்டம் எனபது அந்த திட்டத்தால் மக்கள் பயனை அடைந்து அதன் மூலம் சமூகத்தில் பணசுழற்ச்சி ஏற்பட வழி வகை செய்யப்படுவதாக இருத்தல் வேண்டும் ..
அந்த வகையில் இந்த 3.6 லட்சம் கோடி பணம் வருடத்தில் செலவு என்பது இந்தியாவின் கொள்முதல் செய்யும் காரணியை மேலே கொண்டு சென்று தொழில் முன்னேற்றத்தை கொண்டு வரும் பாதையை ஏற்படுத்தவே செய்யும் ..
இந்திய ஒன்றியம் என்பது $2.5 டிரில்லியன் டாலர்கள் பொருளாதாரம். இது இந்திய பணமதிப்புப்படி சராசரியாக 1,50,00,000 கோடிகள்.
அதாவது ஒரு கோடியே ஐம்பத்து இலட்சம் கோடிகள்.இதில் 3.6 இலட்சம் கோடிகள் என்பது 2.4%.
பணவீக்கம் போக இந்தியா வருடத்திற்கு 6% தொழிலில் வளர்கிறது .. இதில் 2.4% மக்கள் நலவாழ்வு திட்டங்களுக்கு செலவிடுவதில் மிக பெரிய தவறு இல்லை என பொருளாதார வல்லுனர்கள் கூற்றையும் கணக்கில் எடுத்தே இத்திட்டம் தொடங்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் செய்திகள் கூறுகின்றன
மேலும் ராகுலின் திட்டப்படி இது அந்த குடும்பத்தின் பெண்கள் கணக்கில் செலுத்த படும் என பிரியங்கா காந்தி சொன்னதும் குறிப்பிடதக்கது ..
இந்த திட்டத்தில் அந்த 5 கோடி மிகவும் ஏழை நபர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள் எனபதை பற்றி காங்கிரஸ் மேலும் தெளிவாக விளக்கம் தர வேண்டும் ..
மேலும் அப்படி தேர்வு செய்வதில் ஒரு ரூபாய் கூட ஊழல் நடைபெறமால் பார்த்து கொண்டால் ஒரு வருடத்தில் இந்த திட்டம் மிக பெரிய வெற்றி திட்டமாக அமையும் ..
அக்கட்சியின் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இது ஒரு pilot project ஆக தொடங்க பட்டு மெல்ல மெல்ல விரிவு படுத்த படும் என சொல்லி இருப்பதும் வரேவேற்க்கதக்கது ..
காரணம் trial and error முறையில் தவறுகளை இது இந்த திட்டத்தில் திருத்தி சரி செய்து கொள்ள இது வழிவகுக்கும் ..
ஆதலில் காங்கிரஸ் கட்சியின் இந்த திட்டத்தை வெறும் கனவு திட்டமாகவும் புறம் தள்ளி விடவும் முடியாது..
ஒளிவு மறைவு இல்லாமல் ஏழை நபர்கள் தேர்வின் ஆகுதிளை இந்த திட்டம் தரும் என்றால் .,
இந்த திட்டத்தில் அரசு தரும் 3.6லட்ச கோடி பணம் அது மீண்டும் இந்திய சமூக தளத்திலே சுழன்று அது இந்தியாவின் வாங்கும் தகுதியை உயர்த்தி .,
இந்தியாவின் மீது வளர்ந்த நாடுகளின் பார்வையை திருப்பி பல்வேறு தொழில் முனைப்புகளை அது எற்படுத்தி இந்தியாவை இன்னும் ஐந்து வருடத்தில் அதுவே 4 டிரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்புக்கு ஈட்டு செல்லும் சாத்தியம் மிகுதியாக உள்ளது