கடந்த லோக்சபா தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என எதிர்ப்பார்க்கவில்லை, அதனால் தேர்தல் பிரசாரத்தின் போது நாட்டு மக்களுக்கு பெரிய வாக்குறுதிகளை கொடுத்தோம்.
ஒருவேலை நாங்கள் ஆட்சிக்கு வராமல் போயிருந்தால் அதற்கு நாங்கள் பொருப்பேற்று இருக்க வேண்டியதில்லை. ஆனால், மக்கள் எங்களுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்திவிட்டார்கள். அதனால், நாங்கள் அளித்த வாக்குறுதிகளை மக்கள் நினைவில் வைத்துள்ளார்கள். இப்போதைக்கு அதைப்பற்றி சிரித்துக்கொண்டே கடந்து செல்கிறோம்’ என சமீபத்தில் கட்காரி தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
நிதின் கட்கரி இப்படி வெளிப்படையாக பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைராலக பரவியது, எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலரும் அந்த வீடியோவை வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
இது போன்ற நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகளாலேயே பா.ஜ., தேர்தலில் வெற்றி பெற்றதாக அவர் கூறிய வீடியோவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நிதின் கட்கரி பேசிய அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘நீங்கள் கூறியவை அனைத்தும் சரியே’ என குறிப்பிட்டுள்ளார்.
விடியோவில் உள்ள பேச்சின் விவரம் ..
நாங்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதை மிக உறுதியாக நம்பினோம்.அதனால் எங்கள் கட்சிக்காரர்கள், “சாத்தியமற்ற மிகப்பெரிய பொய்களை வாக்குறுதியாக கூறுவோம்,தோற்கத்தானே போகிறோம்,நாம் எதற்கும் பொறுப்பாகப்போவதில்லையே, நாம் எதற்கு கவலைப்பட வேண்டும்.” என்றனர் ..
ஆனால் பிரச்சினையென்னவெனில், “மக்கள் எங்களுக்கு ஓட்டளித்து வெற்றிபெற செய்துவிட்டனர். . .”
(ஏளனமாக சிரிக்கிறார்)
“இப்போது மக்கள் ஒவ்வொன்றாக தேதிவாரியாக எங்கள் வாக்குறுதிகளை கேள்விகேட்கிறார்கள். . ”
(மீண்டும் சிரிக்கிறார்)
“தற்போதெல்லாம் , நாங்கள் அவர்களைப் பார்த்து சிரித்துவிட்டு,நகர்ந்துவிடுகிறோம்” – நிதின் கட்கரி.