தமிழகத்தை அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு தற்போது தேசிய அளவில் பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. பிரபலங்கள் பலர் இந்த பிரச்சனை குறித்து தற்போது குரல் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள்.
 
இந்த வீடியோ தொடர்பாக முதலில் புகார் அளித்த பெண்ணின் அண்ணனை நான்கு பேர் கொண்ட கும்பல் சில நாள் முன் மோசமாக தாக்கி இருக்கிறார்கள்.
 
பார் நாகராஜ், பாபு, செந்தில் குமார், வசந்த குமார் ஆகியோர் இந்த செயலை செய்துள்ளனர். இதில் அதிமுகவில் உள்ள பார் நாகராஜ் ஜெயலலிதா பேரவை செயலாளர். டாஸ்மாக் பார் நடத்துவதால் இவருக்கு பார் நாகராஜ் என்று பெயராம் . ஆளும் கட்சி அதிமுக அரசியல் தொடர்பு இந்த நிலையில் இவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 
இவர்களை ஆளும் தரப்பு காப்பாற்றுவதாக திமுக குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. மேலும் இதில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று திமுக தரப்பு குற்றஞ்சாட்டி இருக்கிறது. #ArrestpollachiRapists என்ற டேக் உருவாக்கப்பட்டு தற்போது இது தேசிய அளவில் வைரலாகி வருகிறது. இதனால் தற்போது இது தேசிய பிரச்சனையாகி உள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன் பொள்ளாச்சியை சேர்ந்த பெண் ஒருவர்தான் அந்த புகாரை அளித்தது. தன்னை சில இளைஞர்கள் பாலியல் வன்முறை செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி வருகிறார்கள் என்று புகார் அளித்து இருந்தார்.
 
பொள்ளாச்சி ஊஞ்சவேலாம் பகுதிக்கு தன்னை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். நம்பித்தானே வந்தேன் , அடிக்காதிங்கண்ணா ன்னு கதற கதற அதை வீடியோ எடுத்து மிரட்டினார்கள் என்று புகார் அளித்தார். இதையடுத்து பொள்ளாச்சி போலீஸ் தனிப்படை அமைத்து இதுகுறித்து விசாரித்தது.
 
இந்த தனிப்படை விசாரணையில் மொத்தம் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சபரி, வசந்த குமார், சதீஷ் குமார் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் குழுவின் தலைவனான திருநாவுக்கரசு மட்டும் எஸ்கேப் ஆனான். போலீஸ் வருவது தெரிந்து கொண்டு, பொருள் பலமும், பண பலமும் கொண்ட திருநாவுக்கரசு தப்பித்தான்.
 
அதன்பின் திமிராக வீடியோ வெளியிட்ட திருநாவுக்கரசு, தனது குற்றங்களுக்கு பின் பலர் இருப்பதாக கூறினான். இதில் ஆளும் அதிமுக மட்டும் பாஜக முக்கிய பிரமுகர்களுக்கு பலருக்கு தொடர்பு இருக்கிறது என்று திமிராக பேசி இருந்தான்.
 
ஆனால் வீடியோ வெளியாக பிரச்சனை பெரிதாகவே போலீசார் சில நாட்களில் இவனையும் கைது செய்தனர். தற்போது போலீசார் இவனை தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
 
இவர்கள் பெண்களை திட்டமிட்டு ஏமாற்றி மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நண்பர்களின் உறவுக்கார பெண்கள், பேஸ்புக்கில் இருக்கும் பெண்கள், கல்லூரி படிக்கும் பணக்கார பெண்களை நேரிலும் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டு, நட்பாகி, பின் காதல் செய்து ஏமாற்றி இருக்கிறார்கள். காதலை காரணம் காட்டி, இவர்கள் பாலியல் வன்முறையில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள்.
 
இவர்களுக்கு சொந்தமான சின்னப்பபாளையம் பண்ணை வீட்டில்தான் இத்தனை சம்பவங்கள் நடந்து இருக்கிறது. அங்கு காதலன், நட்பு என்ற போர்வையில் பெண்களை அழைத்து செல்லும் இவர்கள், பெண்களை பாலியல் வன்முறை செய்து இருக்கிறார்கள். அதன்பின் அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டி இருக்கிறார்கள்.
 
இதை செய்தது வெறும் நான்கு பேர் கொண்ட கும்பல் கிடையாது. இந்த கும்பலில் மொத்தம் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருக்கிறார்கள்.
 
இவர்கள் கடந்த 7 வருடமாக இப்படி மோசமான செயலில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இதன் மூலம் இவர்கள் 5 கோடிக்கும் மேல் மிரட்டி பாதிக்கப்ப்ட்ட பெண்களிடம் இருந்து பண மோடடி செய்து இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.
 
பெண்களை பாலியல் வன்முறை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பெற்று உள்ளனர். பணம் இல்லாத பெண்களை மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் வன்முறை செய்துள்ளனர்.
 
இப்படி பாதிக்கப்பட்டது சில பெண்கள் கிடையாது. 200க்கும் அதிகமான பெண்கள் இப்படி பாலியல் வன்முறை செய்யப்பட்டு, மிரட்டப்பட்டு உள்ளனர்.
 
அதேபோல் இவர்கள் பின்னணியில் ஆளும் கட்சி பாஜக அதிமுக அரசியல்வாதிகள் பலர் இருந்துள்ளனர். பெண்களை மிரட்டி அவர்களை அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கும் வேலையிலும் இவர்கள் ஈடுப்பட்டு இருந்தனர். கோவையை சேர்ந்த சில முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு இதில் தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது.
 
தற்போது இந்த பிரச்சனை சில முக்கிய காரணங்களுக்காக மீண்டும் பரபரப்பான ஒன்றாக மாறி இருக்கிறது. இவர்களிடம் இருந்து போலீசார் இதுவரை 1500 வீடியோக்களை கைப்பற்றி இருக்கிறார்கள். இதில் இருப்பது எல்லோரும் இளம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் கண்ணீருடன் கதறும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
 
இந்த வீடியோக்கள் சினிமா நடிகர்கள், சமூக போராளிகளிடம் தற்போது சென்று சேர்ந்துள்ளது. இதனால் தற்போது இந்த பிரச்சனையை அவர்களும் கையில் எடுத்து இருக்கிறார்கள். போலீசார் இதில் விசாரிப்பதில் மெத்தனம் காட்டுகிறது என்று இந்த வீடியோவை பார்த்தவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த வீடியோக்கள் மிகவும் பதற வைக்கும் அளவிற்கு இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.