நடிகை அமலாபால் முகத்தில் பல வண்ணப் பொடிகளை தூவிக் கொண்டு ஹோலி பண்டிகையை கொண்டாடியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமலாபால், சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து மைனா படத்தில் நடித்தார். இப்படம் இவருக்கு தமிழில் பட வாய்ப்பை தேடிதந்தது.
அதையடுத்து விஜய், விக்ரம், தனுஷ் என தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்தார். கடைசியாக நடிகர் விஷ்ணு விஷாலுடன் ராட்சசன் படத்தில் நடித்திருந்தார்.
இப்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதையே முழுநேர வேலையாக வைத்துள்ளார்.
அந்த வகையில் ஹோலி பண்டிகையை அமலாபாலும் உற்சாகமாக கொண்டாடியுள்ளார். மேலும் உடல் முழுவதும் கலர் பொடியுடன் போட்டோ எடுத்து அதனை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.