ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பதை எதிர்த்து தூத்துக்குடியில் பொதுமக்கள் யாரும் போராட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதனால் தூத்துக்குடியில் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்.
 
மேலும் அவர் ஸ்டெர்லைட் ஆலை உடடினயாக திறக்கப்படாது என்பதால் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
 
ஸ்டெர்லைட் தீர்ப்பு தொடர்பாக, ஓரிரு வாரங்களில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என கூறினார்.
 

கோப்புப்ப்டம் :  ஸ்டெர்லைட் அதிபர் அனில் அகர்வாலுடன் ராபேல் விமான ஊழலில் எதிகட்சிகள் குற்றம் சாட்டும் அனில் அம்பானி

இந்த நிலையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ,மனிதநேயமற்ற முறையில் போலீஸ் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தி, அறவழியில் போரா டிய 13 பேரின் உயிரைப் பறித்த அதிமுக அரசு, லட்சக்கணக்கான மக்களுக்கு சுகாதாரக் கேடு விளைவிக்கும், சுற்றுப்புறச் சூழலை அடியோடு நாசப்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதிலும் அலட்சியம் காட்டி, இன்று டெல்லி பூமியில் முதல்வர் எடப் பாடி பழனிசாமி அவமானப்பட்டு அசிங்கப்பட்டதோடு மட்டுமின்றி, நிர்வாகத் திறமை க்குப் பெயர் போன தமிழக அரசு அதிகாரிகளுக்கும் மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறார் என்றும்.,
 
ஆலையை மூட அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவு எடுங்கள் என்று திமுக சார்பில் சட்டமன்றத்தில் ஆணித்தரமாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தானே வாதாடியும் .
 
அனைத்து எதிர்க்கட்சிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தயும் . மேலும் உயர் நீதிமன்ற நீதிபதிகளே அரசாணை போதாது, அமைச்சரவையைக் கூட்டி முடிவு எடுத்திருக்க வேண்டும் என்று எச்சரித்தும் .,
 
ஆனால் எதையும் காது கொடுத்துக் கேட்காமல் எல்லாவற்றிலும் கரை கண்டதைப் போல, கொள்கை முடிவு எடுப்பதற்குப் பதிலாக ஆலையை மூட தமிழ்நாடு மாசுக்கட் டுப்பாடு வாரியம் அனுப்பிய கடிதத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படை யில் ஆலையை மூடி அரசாணை பிறப்பித்தது அதிமுக அரசு என்றும் .
 
இதற்கு முதல்வரும், துணை முதல்வரும் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நிர்வாகத் திறமையில் தாங்கள் புலிகள் போல் கருத்து தெரிவித்து பிரதான எதிர்க்கட்சியின் கருத்தினை கேலி செய்தார்கள் என்றும் .
 
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எச்சரிக்கையை ஏற்க மறுத்த அவர்கள் இனிமேல் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவே முடியாது என்றும் அடாவடியாகப் பேசினார்கள்.ஆனால் இன்று தேசிய தீர்ப்பாயத்தின் தீர்ப்பு முதல்வரின் முகத்தில் கழுவ முடியாத கரியைப் பூசியிருக்கிறது என்றும்,
 
ஆகையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுற்றுப்புறச்சூழல் ஆபத்து தொடர் பான அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து, அந்த ஆலை தொடருவது சீர் செய்யவே முடியாத மாசு ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்யும் வகையில் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு, தமிழக அமைச்சரவை கூடி கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வேண்டும் என்று வலியுறுத்துவதாக  மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
அதே நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என வலியுறுத்தி தூத்துக்குடி ஆட்சியரைச் சந்தித்து பொதுமக்கள் மனு அளிக்கவுள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
 
கலவர தடுப்பு வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக நிறுத்தி வைக்கப்பட்டன.
 
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சியினர், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாயத்திற்க எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
 
பெண்கள் திரண்டு ஒப்பாரி வைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். போராட்டத்திற்கு இடையே, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
 
அதில் எதிர்கட்சி தலைவர் கோரியதை போலவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு, சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.