ஆம்பன் புயல் காரணமாக, மேற்கு வங்கத்தில் 72 பேர் பலியாகியுள்ளதாக, அந்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா இரண்டரை லட்சம் ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வங்கக்கடலில் உருவான ஆம்பன் புயல் நேற்று (புதன்கிழமை) மேற்குவங்கம் மற்றும் வங்கதேச பகுதிகள் வழியாகக் கரையை கடந்தது. இதனால், அங்கு சுமார் 6 மணி நேரம் பலத்த மழையுடன் சூறாவளி காற்று வீசியது. காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 185 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. மேற்குவங்க கடலோரத்தில் 5 மீ்ட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுப்பின. இந்த புயலில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொல்கத்தாவை விட்டு புயல் கடந்த போது சுமார் அரை மணி நேரம் கொடூரமாக காற்று அடித்தது. இதனால் அந்த நகரத்தில் உள்ள மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தன. குடிசை வீடுகள் அழிந்து போயின. சாலைகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. மேற்குவங்கத்தின் பல பகுதிகளில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
[su_carousel source=”media: 13955,13956″ limit=”100″ width=”700″ height=”400″ items=”1″ scroll=”3″ speed=”0″]
மேலும் வாசிக்க: மேற்கு வங்கத்தை புரட்டிப் போட்ட ஆம்பன்- பல மாவட்டங்களில் மின் இணைப்புகள் துண்டிப்பு
5,500 க்கும் மேற்பட்ட வீடுகள் ஆம்பன் புயலால் அழிந்துள்ளன. கொல்கத்தா, ஹுக்ளி, ஹவுரா ஆகிய பகுதிகலும் சீர்குலைந்து போயுள்ளது. இப்புயலால் கொல்கத்தா விமான நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளது. புயல் காரணமாக விமான நிலைய கட்டடங்கள், ஓடுபாதைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. புயல் கரையை கடப்பதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, கொரோனா வைரஸ் தொற்றுநோயை விட ஆம்பனின் தாக்கம் மோசமாக உள்ளதாக தெரிவித்தார். இதுவரை மேற்கு வங்க மாநிலம் முழுவதும் 72 பேர் புயல் தாக்குதலில் பலியாகியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், நான் இதற்கு முன்பு இப்படி ஒரு பேரழிவை பார்த்தது கிடையாது, எனவே மேற்கு வங்க மாநிலத்துக்கு பிரதமர் உடனடியாக நேரில் வந்து நிலைமையை நேரில் பார்த்து உதவிகள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.