ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக விளக்க அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் 42000 கோடிகள் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 3 பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
முன்னதாக வழக்கறிஞர் வினீத் தண்டா என்பவர் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், ரபேல் போர் விமானத்தின் விலை, ஒப்பந்த விவரம், காங்கிரஸ் அரசில் நிர்ணயிக்கப்பட்ட விலை, பாஜக அரசில் நிர்ணயம் செய்யப்பட்ட விலை ஆகியவற்றை சீல் வைக்கப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
மேலும், மற்றொரு வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர், பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்க இருக்கும் ரபேல் போர் விமானத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. ஆதலால் விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்குகளை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம்,
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். வெளிநாட்டில் இருந்து ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை என்ன என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது. மேலும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட தகவல்களையும் தெரிவிக்க வேண்டும். எதன் அடிப்படையில் முடிவு மேற்கொள்ளப்பட்டது என்பதை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணையை அக்.,29 க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இந்த தகவல் கிடைக்க பெறின் இந்தியாவின் பாரம்பரிய HAL அரசு நிறுவனத்தை விட்டு விட்டு 10 நாள் முன்பு ஆரமித்த கம்பெனி reliance எப்படி உள்ளே வந்தது என்ற உண்மை தெரிய வரும் போது இது மிக பெரிய சிக்கலை பாஜகவின் அரசுக்கு எற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்