அதிகாரிகளால் மனஉளைச்சலுக்கு ஆளானதாக புகார் கூறியுள்ள திருநங்கை போலீஸ் நஸ்ரியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
“ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வசந்தபுரத்தை சேர்ந்தவர் நஸ்ரியா(வயது 22). திருநங்கையான இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி ராமநாதபுரம் ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியில் சேர்ந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீசாக பணியாற்றும் முதல் திருநங்கை என்ற சிறப்புடன் அவர் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் திருநங்கை நஸ்ரியா நேற்று முன்தினம் இரவு எலி மருந்தை (விஷம்) தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை வீடியோ பதிவாக ‘வாட்ஸ்-அப்’பில் அவரே வெளியிட அது வைரலாக பரவியது.
அந்த வீடியோவில் நஸ்ரியா பேசும் போது, ‘அதிகாரிகளால் மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும், தனது இந்த நிலைக்கு ஆயுதப்படை பிரிவு தலைமை காவலர் ஒருவரும், சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டரும் தான் காரணம். அவர்கள் மீது போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.
பின்னர் அந்த வீடியோவை தனக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பினார். இதை பார்த்தவர்கள் உடனடியாக அவரை சென்று பார்த்தனர்.
அங்கு மயங்கிய நிலையில் கிடந்த நஸ்ரியாவை மீட்டு உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.” அங்கு அவருக்கு முதல் உதவி அளித்த பின்னர் அவர் நலமோடு உள்ளார் .
அவரின் மேல் அதிகாரிகள் நஸ்ரியாவின் புகார் மீது நடவடடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர்