இன்று 3 .1 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து என அதிமுக அரசின் முதல்வர் எடப்பாடி கூறிய நிலையில் ..
 
2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு மாயமான் காட்சி என்பது மட்டுமே உண்மை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு செலவில் அதிமுக தேர்தல் பிரச்சார மாநாடாக மாற்றியுள்ளார் முதல்வர் பழனிசாமி என அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் விளம்பரம் செய்து அரசின் பணத்தை வீணடித்ததுதான் மாநாட்டின் சாதனை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 10.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று முதல்வர் எடப்பாடி கூறியுள்ளார்.
 
முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு அமைச்சர்கள் உல்லாசப் பயணம் மேற்கொண்டனர். அந்நிய முதலீடுகள் குறைந்து, முதல் 10 இடங்களுக்குள் தமிழகம் வர முடியவில்லை. நாட்டிற்குள் வந்த அந்நிய முதலீடுகளில் தமிழகம் பெற்றது 0.79% மட்டுமே என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே ஒப்பந்தங்கள் போட்ட முதலீட்டாளர்களை அழைத்துக்கூட தமிழக அரசு பேசவில்லை என அவர் குறிப்பிட்டார்.
 
மேலும் முதல் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 25 சதவீதத்தைக்கூட அரசால் நிறைவேற்ற முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஊழல் ஆட்சியால் நம்பிக்கை இழந்த முதலீட்டாளர்கள் வேறு மாநிலத்துக்கு சென்றனர் என ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
முதலாவது மாநாட்டில் 2015 ல் ஜெயலலிதா ஆட்சியில் ஒப்பந்தங்கள் மூலம் வந்த 2. 4லட்சம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து என்று கூறிய நிலையில் அந்நிய முதலீடாக் 7000 கோடி கூட வரவில்லை என்பதும் குறிப்பிடதக்கது
அதில் சென்ற முறை ஜெயலலிதா அரசு 100 கோடி செலவு என்று கணக்கு காட்டியதும் ., இந்த முறை முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆன செலவு எவ்வள்வு என அதிகாரபூர்வமாக இது வரை அதிமுக அரசால் தெரிவிக்கபடவில்லை என்பதும் குறிப்பிடதக்கது

மேலும் படிக்க : போலி ஒப்பந்தங்கள் , சரியும் முதலிடுகள் இந்த முறையாவது சொன்னதை செய்யுமா அதிமுக அரசு