முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிக விலை வழங்கப்பட்டுள்ளதாகவும்; விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் அக்கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
 
அதைத்தொடர்ந்து ரஃபேல் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் சௌரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
 
இந்த வழக்கில் வெள்ளியன்று தீர்ப்பை வெளியிட்ட நீதிபதிகள், ரஃபேல் போர் விமானம் வாங்கும் மத்திய அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என்று தெரிவித்துள்ளனர். எனவே ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளது.
 
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், ஒப்பந்தத்தில் சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால் நீதிமன்றம் அதனை விசாரித்தது. ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான கொள்கை முடிவு, தொகை, ஒப்பந்ததாரர் ஆகிய அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டது.
 
விசாரணை முடிவில் வணிக ரீதியாக எந்த சலுகையும் அளிக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை, ரஃபேல் ஒப்பந்தம் சரியானதுதான், திருப்தி அளிக்கிறது என்று தெரிய வந்திருப்பதால், அந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடாது.
 
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் ஊழல் நடக்கவில்லையா  என்பதை உச்ச நீதிமன்றம் மறுக்கவும் இல்லை ஒப்பு கொள்ளவும் இல்லை..
 

கோப்பு படம் : தலைமை நீதிபதியுடன் பிரதமர் மோடி

இந்த நிலையில் இந்த மாபெரும் ஊழலை மக்கள் மன்றத்தில் எடுத்து செல்ல காங்கிரஸ் முடிவு செய்து இருப்பது பாஜக மத்தியில் கலக்கத்தை எற்படுத்தி உள்ளது ..
 
 
இதை இன்று கையில் எடுத்த ராகுல் காந்தி சரமாரியாக கேள்விகள் எழுப்பி உள்ளார்.அவர் எழுப்பிய முக்கிய கேள்விகள் விவரம் வருமாறு :
 
ரஃபேல் உதிரிபாக தயாரிப்பு ஒப்பந்தத்தில் எச்.ஏ.எல்-ஐ சேர்க்காதது ஏன் ?
 
அனில் அம்பானியின் நிறுவனத்தை போர் தயாரிப்பில் கூட்டு சேர்த்தது ஏன்?
 
ரஃபேல் விமானத்தின் விலை உயர்த்தப்பட்டது ஏன்?
 
ரஃபேல் போர் விமான பேரத்தை விசாரிக்க ஜே.பி.சி குழு அமைக்க தயக்கம் ஏன்?
 
ரபேல் ஒப்பந்தத்தில் ரூ.30,000 கோடி கையாடல் நடந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. ரஃபேல் பற்றி தலைமை கணக்காயர் அறிக்கையை ஏன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை..அது ஏன் ?
 
பொது கணக்கு குழுவுக்கே ரஃபேல் ஒப்பந்த விவரம் தெரிவிக்கப்படவில்லை அது ஏன் ?
 
என்று திடுக்கிடும் கேள்விகலை   ராகுல் காந்தி எழுப்பியுள்ளார்.
மேலும் பிரான்சில் என்ன நடந்தது என்பது பிரதமருக்கு மட்டுமே தெரியும் என்றும் நாட்டின் காவலன் என்று கூறிய பிரதமர் மோடி திருடனாகிவிட்டார் என ராகுல் காந்தி புகார் தெரிவித்துள்ளார்.
 
இதை மறைக்கவே செய்தியாளர் சந்த்திப்பை மோடி தவிர்த்து வருதாக கூறிய ராகுல் காந்தி ., செய்தியாளர் முன் அம்பலப்பட்டு விடுவோமோ என்று பிரதமருக்கு அச்சம் என்றும் கூறினார்.
 
மேலும் ரஃபேல் விமான ஒப்பந்த விவரங்களை சி.ஏ.ஜி.க்கு கூட தெரிவிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்  என்றும் கூறியுள்ளார்.