கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும் , முன்னாள் எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
 
கொடநாட்டு நிகழ்வுகளை சங்கிலித் தொடராக ஆ.ராசா பட்டியலிட்டார். அதில் அவர் கூறியதாவது:
 
ஜெயலலிதா மறைவுக்குப் பின், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த காவலாளி கொலை செய்யப்பட்டார்.
 
பின்னர் அதில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், விபத்தில் உயிரிழந்தார்.
 
மற்றொரு முக்கியக் குற்றவாளி சயான், கேரளாவில் தனது குடும்பத்தோடு காரில் செல்லும்போது, விபத்துக்கு உள்ளானதில், அவரின் மனைவி விஷ்ணுப்ரியா, மகள் நீத்து ஆகியோர் உயிரிழந்தனர்.
 
சயான் உயிர் பிழைத்தார். இவர்களைத் தவிர்த்து, கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார், தற்கொலை செய்து கொண்டார்.
 
அடுத்தடுத்து நடந்த இந்த மர்ம மரணங்களின் பின்னணியில் யார் இருக்கிறார் என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது.
இதில் மேலும் ஆ.ராசா வைத்த அடுக்கடுக்கான கேள்விகள் பின் வருமாறு :
 
கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணம் என்ன?
 
சிசிடிவி ஏன் வேலை செய்யவில்லை?
 
போலீஸ் இலாகாவை முதல்வர் மற்றவர்களிடம் ஒப்படைக்க தயங்குவது ஏன்
 
மறைந்த ஜெ.வின் கொடநாடு பங்களாவில் போலீஸ் பாதுகாப்பு இல்லாதது ஏன்
 
தெகல்கா முன்னாள் ஆசிரியர் வெளியிட்ட தகவலுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று கேட்பது ஏன்
 
கொடநாடு விவகாரத்தில் சயனை அப்ரூவராக மாற்ற வேண்டும். முதல்வருக்காகத்தான் கொள்ளையில் ஈடுபட்டதாக சயன் பேட்டியளித்தார்.
 
முதல்வர் கொடுத்த மனுவை வைத்தே காவல்துறையினர் விசாரணையை தொடங்க வேண்டும்.
 
கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். கொடநாடு விவகாரத்தில் அனைத்தும் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும்.
 
கொடநாடு காவலாளி மரண வழக்கில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதர்கான சமிக்கைகள் இருக்கின்றன. கொடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னிடம் உள்ள போலீஸ் இலாகாவை நிர்வகிக்கக்கூடாது. போலீஸ் விசாரணை நியாயமாக நடைபெற வேண்டுமென்றால் முதல்வர் பழனிச்சாமி பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.