சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் தற்போது நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அங்கிருந்து கேரள அரசுப் பேருந்துகள் மூலமாக பம்பை வரையில் பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சபரிமலையில் வழிபடுவதற்காக புதன்கிழமை நிலக்கல்லுக்கு வந்தார். அப்போது, அங்கு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். பக்தர்களின் வாகனங்கள் பம்பை வரை செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுகுறித்து காவல்துறையிடம் அவர் பேசியபோது, பக்தர்களை நீங்கள் தேவையின்றி துன்புறுத்துகிறீர்கள். பம்பை வரை கேரள அரசுப் பேருந்து மட்டும் அனுமதிக்கப்படுவது ஏன்? இது ஐயப்ப பக்தர்களுக்கு நல்லதல்ல. தனியார் வாகனங்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கண்டிப்புடன் அதிகாரமுடன் பேசினார் .
உச்சநீதி மன்ற உத்தரவை அமுல் படுத்த வேண்டிய காவல்துறை ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திரா இதுகுறித்து அமைதியாக விளக்கம் அளித்தபோது,
“பம்பையில் இருந்த வாகன நிறுத்துமிடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், அங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு வழியில்லை. அரசுப் பேருந்துகள் பக்தர்களை இறக்கி விட்டபின், மீண்டும் பக்தர்களை ஏற்றிக்கொண்டு உடனடியாக திரும்பி வந்துவிடும்.
ஆனால், தனியார் வாகனங்களை அனுமதித்தால் போக்குவரத்து நெரிசல் உருவாகி பக்தர்களுக்கு அசெளகரியம் ஏற்படும் என்று தெரிவித்தார். அதே சமயம், அமைச்சர் வேண்டுமானால் அவரது அரசு வாகனத்தில் செல்லலாம் ” என்றார் காவல்துறை ஐபிஎஸ் யதீஷ் சந்திரா.
ஆனால் இதனை ஏற்க மறுத்து கேரள பாஜக ஆலோசனைப்படி காவல்துறையினரின் உச்ச நீதி மன்ற உத்தரவை அமுல் படுத்தும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கேரள அரசுப் பேருந்திலேயே பொன்.ராதாகிருஷ்ணன் புறப்பட்டுச் சென்றார்.
மத்திய அமைச்சருக்கும், கேரள காவல்துறை உயரதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில் அதில், அமைச்சரை அவமதிக்கும் வகையில் பேசியதாக கேரள ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திரா மீது புகார் தெரிவித்த மாநில பாஜக பொதுச்செயலாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன் , மத்திய மோடி அரசிடம் முறையிட்டு அவருக்க தக்க பாடம் புகட்ட போவதாகவும் மிரட்டும் விதமாக கூறினார்.
உச்ச நீதி மன்ற உத்தரவை அமுல் படுத்த வேண்டிய காவல்துறை ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திரா அவரின் வேலையை அவர் செய்ததால் மத்திய மந்திரி கூப்பிட்டு வந்து அவரை மிரட்டும் கேரளா பாஜக வின் போக்கை பல் வேறு ஒய்வு பெற்ற காவல் அதிகாரிகள் கண்டித்து வருவகின்றனர்.
மேலும் உச்ச நீதி மன்ற உத்தரவை அமுல் படுத்த வேண்டி , பவர்புல் மத்திய மந்திரி என்றும் அஞ்சிவிடாமல் துணிந்து சிறப்பாக செயல்பட்ட காவல்துறை ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திராவுக்கும் உண்மையான பக்தர்கள் இடத்திலே சமூக தளத்தில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது ..