மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை அமைக்க எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மத்திய செலவினங்களுக்கான நிதிக்குழு தகவல் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், 14 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்படும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்தது. அதன்படி கடந்த 2014-15, 2015-16, 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் 13 எய்ம்ஸ்கள் அமைக்க அறிவிப்பு வெளியாகின.
ஜம்மு, காஷ்மீர், பிஹார், தமிழகம், குஜராத் ஆகிய 5 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் மதுரை மாவட்டம் அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை குறித்து மதுரையைச் சேர்ந்த ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு அளித்திருந்தார்.
இதனையடுத்து மதுரை மாவட்டம் தோப்பூரில் எம்ய்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு டெண்டர் எதுவும் விடப்படவில்லை என்றும் எப்போது இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்ற காலக்கெடுவும் குறிப்பிடப்படவில்லை என ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது.
இந்த செய்தி தீயாக சமூகவலைதளத்தில் பரவ எய்ம்ஸ் குறித்து பேட்டியளித்த ராதாகிருஷ்ணன், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் எந்த மாற்றமும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். மேலும் அக்டோபர் மாதம் 9-ம் தேதி தானும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும், மத்திய அமைச்சர் ஜே.பி.நாட்டாவை நேரில் சந்தித்து பணிகளை விரைவு படுத்த கோரிக்கை வைக்க உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
எய்ம்ஸ் குறித்து பேட்டியளித்த ராதாகிருஷ்ணன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் அமையும் என்றும் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நிதி ஒதுக்கீடு மற்றும் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு காலஅவகாசம் தேவைப்படும் என்று கூறியுள்ளார்.
மத்திய அரசு எச்.எல்.எல். என்ற தனியார் நிறுவனத்திடம் கட்டிட வரைவை கோரியுள்ளது என்றும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும், தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் தற்காலிகமானவைதான் என்று தெரிவித்தார்.
ஆனால் தற்போது பெறப்பட்ட ஆர்டிஐ தகவல் மூலம் அறிவிப்பு வெளியாகி மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை அறிவவிப்பு வெளியாகி சுமார் நான்கு மாதம் ஆன நிலையில் எந்த ஒரு நடவடிக்கை கூட குறைந்த பட்சம் டெண்டர் விடும் பணி உட்பட எதுவும் நடைபெறவில்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளதாக சமூகதளத்திலே பலரும் பதிவிட்டு வருகின்றனர்..
Trackbacks/Pingbacks