ஸ்டாலின் பேசாத ஒன்றை பேசியதாக கூறி சமூக வலைதளங்களில் பரவும் ஒரு போட்டோஷாப் பொய் செய்தியை, தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டு, கண்டனம் எழுந்தவுடன் பிறகு நீக்கியதால் தமிழ்நாடு பி.ஜே.பி. யை சமூகவலைதளத்தில் பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர்
 
கடந்த ஜனவரி 30ம் தேதி கருணாநிதி சிலைதிறப்பு விழாவுக்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஈரோடு சென்றார்.
 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் திருப்பூரில் துறைமுகம் அமைக்கப்படும்!” என்று கூறியதாக, பொய்யான செய்தி யை நீயுஸ் 7 செய்தி சேனலின் ‘ப்ரேக்கிங் நியூஸ்’ வடிவில் போட்டோஷாப்பாக வர .,இதை பாஜக , தினகரன் அணி, மற்றும் அதிமுக வினர் இதன் உண்மைத் தன்மையை அறியாமலேயே, அ.தி.மு.க., பி.ஜே.பி. ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
 
ஆனால் தமிழ்நாடு பி.ஜே.பி.யும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த போலியான போட்டோஷாப் செய்தியை பிப்ரவரி 2ம் தேதி இரவு 8:14 மணிக்கு பதிவிட்டது. பதிவில், “திருப்பூரில் துறைமுகமா!! ஒன்பது கிரகங்கள் உச்சத்தில் இருக்கும் ஒருவரால் தான் இந்த லெவலுக்கு யோசிக்க முடியும்” என்று நக்கலாக கமெண்ட் வேறு அடித்திருந்தனர்.
 
இது போலி செய்தி என்று கண்டனக் குரல்கள் இணையதள திமுகவினர் குரல் எழும்ப, பதிவிட்ட ஒரு மணிநேரத்திலேயே பயந்த பாஜக அந்த செய்தியை நீக்கியது
 
குறைந்தபட்சம் செய்தியை உறுதிப்படுத்திவிட்டு பதிவிடும் எண்ணம் கூட இல்லாமல், அதிகாரப்பூர்வ பக்கத்தில் போட்டோஷாப் பொய்ச் செய்தியை பி.ஜே.பி. பதிவிட்டுள்ளது, என சமூக வலைதளவாசிகள் கண்டித்து வருகின்றனர்
 
அவ்வப்போது இதுபோன்ற தவறான போட்டோஷாப்புகளை ஆடிட்டர் குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுவிட்டு, பிறகு நீக்கிவிடுவார்.
 
தான் பதிவிடும் செய்தி விவகாரம் ஆகும் பட்சத்தில், தனது அட்மின் தான் செய்தியை பதிவிட்டதாக ஹெச்.ராஜா ‘ஜம்ப்’ அடிப்பார்.
 
துபாய் தெருக்களை குஜராத் தெருக்களாக போட்டோஷாப் செய்ததில் தொடங்கி,
 
ராணுவ பெண் அதிகாரியை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகளாக சித்தரித்தது வரை,
 
தினமும் புதிய புதிய டிசைன்களில் போட்டோஷாப்புகள் உலா வருகின்றன. இதுபோன்ற பொய் செய்திகளை பரப்புவது பி.ஜே.பி.யினர் தான் என்கிற குற்றச்சாட்டு நீண்ட ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இதனை பி.ஜே.பி. தலைமை மறுத்தும் வந்தது.
 
திருப்பூர் துறைமுகம் போலிச் செய்திக்கு தமிழ்நாடு பி.ஜே.பி. தலைமை என்ன காரணம் கூறுவார்கள் ..இனி மேல எப்படி மறுப்பார்கள