பணமதிப்பு நீக்கம் மிக கொடுமையான நிதி அதிர்ச்சியை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ளார்.
 
மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்தவரே இவ்வாறு கருத்து கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டு செல்லாது என கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
 
இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்ற 50 நாள் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் தங்களிடம் உள்ள பணத்தை டெபாசிட் செய்யவும், அவற்றை வங்கியில் இருந்து எடுக்கவும் மக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்தது.
 
வேலை இழப்பை ஏற்படுத்தியது. இது குறித்து எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனம் செய்தனர். ஆராயாமல் அவசர கதியில் செயல்படுத்தியது எனவும், இந்தியா போன்ற நாடுகளில் பணமதிப்பு நீக்கம் பலன் தராது.
 
ஏனெனில் கருப்பு பணத்தை மீட்க இது சரியான வழியல்ல என கருத்துகள் கூறப்பட்டன. ஆனால், இது குறித்து மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், தனது பதவிக்காலம் முடிய ஓராண்டு முன்பே திடீரென பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு மத்திய அரசின் தவறான பொருளாதார முடிவுகளே இதற்கு காரணம் என கூறப்பட்டது.
 
இதை தொடர்ந்து, அரவிந்த் சுப்பிரமணியன், மோடி – ஜெட்லி பொருளாதாரத்தின் சவால்கள் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதில் பணமதிப்பு நீக்கம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
 
இதில், கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி பணமதிப்பு நீக்கம் கொண்டுவரப்பட்டது. இது மிகப்பெரிய, கொடுமையான நிதி அதிர்ச்சி. நாட்டில் புழக்கத்தில் இருந்த 86 சதவீத கரன்சி திரும்பப் பெறப்பட்டது.
 
இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) பாதிக்கப்பட்டது. பொருளாதாரம் மிக வேகமான சரிவை சந்தித்தது. பணமதிப்பு நீக்கத்துக்கு முந்தைய 6 காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 8 சதவீதமாக இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த 7 காலாண்டுகளில் இந்த வளர்ச்சி சராசரி 6.8 சதவீதமாக குறைந்து விட்டது. பணமதிப்பு நீக்கம் பொருளாதார வளர்ச்சியை பாதித்து விட்டது என்பதில் யாருக்கும் முரண்பாடு இல்லை.
 
இந்த வளர்ச்சி 2 சதவீதம்தான் குறைந்ததா அல்லது அதற்கு மேல் குறைந்ததா என்பதுதான் விவாதப்பொருளாக இருக்கிறது. பணமதிப்பு நீக்கம் என்ற பெரிய அதிர்ச்சி காரணமாக அமைப்பு சாராத தொழில்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டன.
 
இதனால் வேறு வழியின்றி மின்னணு பரிமாற்றத்துக்கு மாறினர். ஜிஎஸ்டி நடைமுறை, கச்சா எண்ணெய் விலை, வட்டி விகிதம் ஆகியவையும் பணதிப்பு நீக்கத்தால் பாதிக்கப்பட்டன என தெரிவித்துள்ளார்.
 
மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்தவரே இவ்வாறு கருத்து கூறியிருப்பது மோடியின் பாஜக ஆட்சிக்கு பெரும் அவப்பெயரை பெற்று தரவல்லது என பொறுளதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்