பாலியல் தொடர்பான வழக்கில் தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவல்துறை கைது செய்த நிலையில், மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்றக் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது 6 பிரிவின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியநிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாகிவிட்டார். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மதுரை, திருநெல்வேலி என அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் தேடும் பணி தீவிரமடைந்தது. இந்நிலையில், பெங்களூருவுக்கு அருகே உள்ள தம்மநாயக்கனஹள்ளி பகுதியில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சுற்றி வளைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து சைதாப்பேட்டை 17வது அமர்வு நீதிபதி கிருஷ்ணன் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை அடையார் சிறப்பு தனிப்படை காவல்துறை ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி- உயர்நீதிமன்றம்