பாஜக என்ன முயற்சித்தும், அதன் பலன் எங்கள் அரசுக்கு ஆதரவாகவே இருந்துள்ளது என்று ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சச்சின் பைலட் கருத்து கூறியுள்ளார்.
ராஜஸ்தானில், காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் எழுந்தது. அதன் விளைவாக பைலட்டின் துணை முதலமைச்சர் பதவியும், மாநில கட்சி தலைவர் பதவியும் பறிக்கப்பட்டன.
இந்நிலையில் ராஜஸ்தானில் இன்று கூடிய சட்டசபை கூட்டத்தொடரில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அசோக் கெலாட் நம்பிக்கை வாக்கு கோரினார். சட்ட பேரவையில் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதாக சட்ட பேரவை சபாநாயகர் அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில 200 சட்டபேரவை உறுப்பினர்களில், நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரசுக்கு ஆதரவாக 125 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். இதில் அசோக் கெலாட்டுக்கு ஆதரவாக ஏற்கெனே 102 எம்.எல்.ஏக்கள் இருந்த நிலையில், தற்போது கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ஆதரவும் கிடைத்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சிக்கு 72 எம்.எல்.ஏக்களின் ஆதரவும், அதனைத் தொடர்ந்து கூடுதலாக மூன்று எம்.எல்.ஏக்களின் ஆதரவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து சச்சின் பைலட் கூறுகையில், அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று (ஆகஸ்ட் 14) ராஜஸ்தான் சட்டமன்றத்தில் மிகச் சிறந்த பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் என்ன முயற்சித்தும், அதன் பலன் அரசுக்கு ஆதரவாகவே இருந்துள்ளது என்று ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சச்சின் பைலட் கருத்து கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க: மோடியுடன் பூமி பூஜையில் பங்கேற்ற ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா..