நேற்று அமெரிக்கவுடன் ஒப்பந்தம் கண்ட மோடி அரசின் COMCASA அமுலுக்கு வந்தால் கொல்காத்தவில்,விசாகபட்டினத்தில் ஏன் மெரினாவில் கூட அமெரிக்கா போர்கப்பல் இனி நிற்பதை காணலாம்//New Delhi and Washington D.C. also agreed to hold a joint war drill off the eastern coast of India in 2019, involving the armies, navies and air forces of the two nations.//
அது என்ன இந்திய கிழக்கு கடலில் மட்டும்… அமெரிக்க கிழக்கு மேற்கு கடலில் கூட இந்திய கப்பலை நிறுத்தி வைத்து joint war drill செய்யலாம் அல்லவா..ஏன் செய்ய கூடாது என்ற கேள்வியை மதியுகம் கொண்ட பாஜக மந்திரிகள் வைக்க மறந்தது ஏன் என்ற கேள்விக்கும் பதில் இல்லை
போக்ரான் நாம் வெடிக்கவில்லையா, செவ்வாய் கிரகம் நாம் சுயமாக காணவில்லையா, என்ன வளம் இல்லை நம் திருநாட்டில் என்ற கேள்விக்கும் பதில் இல்லை…
COMCASA ஒப்பந்தம் சீனா ரஷ்யாவை இது நமக்கு நிரந்திர எதிரி ஆக்கி விடும் ஆபாயம் உள்ளது… நேரு கண்ட அமைப்புசாரா nonalignment கொள்கையை காற்றில் விடும் இந்த செயல் இந்தியாவை படுபதாளத்தில் கிழே தள்ளி விடும் என்ற அச்சத்தையும் மக்களுக்கு போக்க இந்த மத்திய அரசு இந்த நேரத்தில் தவறி விட்டது.
ஓரு பக்கம் BRICS (Brazil, Russia, India, China, South africa) என்ற வலுவான அமைப்பில் இந்தியா இருந்து கொண்டு இன்னொரு பக்கம் COMCASA என்பது எல்லாம் பாஜக அரசால் மட்டுமே செய்ய கூடிய அபிராமிகளின் செயல் என்று இனி பொது மக்களும் பேச அரம்பித்து விடுவார்கள்.
COMCASA ஒப்பந்தம் மன்மோஹன் சிங் அரசு இருக்கும் போது அமெரிக்காவின் இந்த முயற்சியை தடுத்தது என்பதை ஊடகங்கள் நமக்கு சொல்லப்படாமல் மறைத்த செய்தி… சீனாவின் வளர்ச்சியை தடுக்க இது என்று பாஜக அரசு சொன்னாலும், இது மூட்டைபூச்சிக்கு பயந்து வீட்டைகொளுத்தும் கதை…
ஏற்கனவே மோடி அவர்களும் அவரது மொத்த படித்த ஆர்எஸ்எஸ் ஆடிட்டர் சேனைகளும் பணமதிபிழப்பு நடத்தி எப்படி இந்தியாவின் பொருளதாரத்தை சிதைத்தார்கள் என்று நாம் கண் கூடாக கண்டது தானே, இதனாலே
பெட்ரோல்விலை 83 ரூ தாண்டியுள்ளது,
ரூபாய் 72.12 ஒரு டாலர் என்றாகியுள்ளது,
அன்னிய செலவாணி இழப்பு மட்டுமே 3 லட்சம் கோடிகளை தாண்டியுள்ளது,
NPA வாராக் கடன் 12 லட்சம் கோடிகளை தாண்டியுள்ளது,
அரசு ஜோடிக்கப்பட்ட GDP புள்ளிவிவரங்களை புனைகிறது
என உச்சக்கட்ட குழப்பத்தில் நாடு இருக்கும் நிலையில் நம்மையும் நாம் காப்பற்ற வேண்டும் நமது இந்திய தேசத்தையும் நாம் தான் காப்பற்ற வேண்டும் என்ற நிலைக்கு நம்மை பாஜக அரசு தள்ளியுள்ளது தான் வேதனை.
அடுத்ததாக வரும் அரசு COMCASA – Communications Compatibility and Security Agreement தடுக்க வேண்டும், இல்லாவிட்டால் அதிமுக C/o பாஜக என்பது போல இந்தியா C/o அமெரிக்கா என்றாகி விடும் அவலமும் உள்ளது.
நாம் வலிமையற்ற சாதாரண குடிமக்கள் தான் ஆனால் நாம் தெய்வத்தின் குழந்தைகள் என்ற இந்திய கலச்சார நம்பிக்கையின்படி பாதுகாப்பு விமானத்தில் 36000 கோடிகள் மத்திய பாஜக அரசு rafalescam ஊழல் செய்த வழக்கை உச்ச நீதி மன்றம் எற்ற நிலையில்,
சோபியா எனும் இளம் மாணவியின் “பாசிசபாஜகஆட்சிஒழிக” என்ற ஒற்றை சொல்லை கூட பொறுக்க முடியாமல் சிறையில் தள்ளிய பாஜகவை ஜனநாயகம் என்னும் விரல் மை தடவி அழிக்கும் காலம் கனிந்து விட்டது என்று சமூக தளத்தில் இந்திய மக்கள் ஆவேசத்துடன் பேசுகிற பேச்சு அரசின் காதில் இன்னமும் விழாமல் இருப்பது தான் பாஜகவின் அழிவுகால விழாவின் தொடக்க புள்ளி என கருத வேண்டியுள்ளது.