கடந்த 2017-18-ம் ஆண்டில் ஆளும் பா.ஜனதாவுக்கு ரூ. 1000 கோடிக்கு மேல் அதிகமாக நன்கொடைகள் வந்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
மாயாவதியின் பகுஜன் சமாஜ் ரூ.717 கோடி நன்கொடை பெற்றுள்ளதாக ரிட்டன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவே பகுஜன் சமாஜ் கட்சியின் வருவாய் 2016-17-ம் ஆண்டு ரூ. 681 கோடி ரூபாய் மட்டுமே.
 
இதற்கிடையே மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் வருவாய் கடந்த 2016-17-ம் ஆண்டில் ரூ.609 கோடி இருந்த நிலையில், அது ரூ.516 கோடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 2017-18-ம் ஆண்டில் ரூ.104 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக ரிட்டனில் தெரிவித்துள்ளது.
 
பா.ஜனதாவின் வருவாயோடு ஒப்பிடும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வருவாய் 10 சதவீதம் மட்டுமே.
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வருவாய் ரூ.1.50 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் எதிர்க்கட்சியான காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் அவர்களுடைய ரிட்டன் அறிக்கையை இன்னமும் தாக்கல் செய்யவில்லை
 
ஜனவரி 2-ம் தேதி வரையில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் வெளியீட்டில் அதிகமான நிதியாக பா.ஜனதாவுக்கு ரூ.210 கோடி கிடைத்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் ரூ.222 கோடிக்கு தேர்தல் நிதிப்பத்திரங்கள் வெளியிட்டதில் 95 சதவீதம் பா.ஜனதாகவுக்கு சென்றுள்ளது.
பாஜக தனியார் நிறுவனங்களுக்கு அதிக உதவி செய்வதால் அவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் கொட்டி தருவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்