இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவுடன் நிறைவடைந்தன. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 95.92 புள்ளிகள் சரிந்து 37,462.99 புள்ளிகளில் நிறைவடைந்தது.
 
தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியானது 22.90 புள்ளிகள் சரிந்து 11,278.90 புள்ளிகளில் நிறைவடைந்தது.
 
டாடா ஸ்டீல் பிபி, சவுத் பேங்க், டெல்டா கார்ப், டாடா ஸ்டீல், டிசிஎஸ், இன்போசிஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் மதிப்பு சரிந்தன.
 
எச்டிஎப்சி பேங்க், எச்டிஎப்சி, எஸ்பிஐ, கோட்டாக் மகேந்திரா, ஐசிஐசிஐ பேங்க், ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட பங்குகள் மதிப்பு சற்று உயர்ந்தன.
 
அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக போர் கடந்தாண்டு ஜூலை மாதம் ஆரம்பித்தது. கடந்த ஜூலை மாதம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரியை விதித்தது.
 
இதற்குப் பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சீனா வரியை அதிகரித்தது.
 
இந்நிலையில் அமெரிக்கா – சீனா வர்த்தகத்தில் உள்ள பதற்றமான நிலை ஆசிய பங்குச்சந்தையில் சரிவை ஏற்படுத்தியது.
 
ஆனால் பங்கு மதிப்புகள் சரிந்ததற்கு சீனாவுக்கு அமெரிக்கா விடுத்த வரி விதிப்பு மட்டும் காரணம் அல்ல.
 
நிறுவனங்களின் 4ம் காலாண்டு முடிவுகளும் ஒரு காரணம். அதோடு, தேர்தல் முடிவு நெருங்குவதால் முதலீட்டாளர்கள் அதிக கவனத்துடன் பங்கு பரிவர்த்தனையை கையாண்டு வருகின்றனர்.
இதுவும் சந்தை இறக்கத்துக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.