சென்னை மெரினா கடற்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் காதலர்கள் வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் கடற்கரை பகுதி பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் ேநற்று முன்தினம் மாலை இளம்பெண் ஒருவர் மெரினா கடற்கரைக்கு தனியாக வந்து, விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள மணல் பரப்பில் அமர்ந்துள்ளார்.
 
இதை பார்த்த 4 பேர் கும்பல், இளம்பெண் அருகே வந்து அவரை சுற்றி அமர்ந்து கொண்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு, அந்த இளம்பெண் அழுதப்படி கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
 
இதைபார்த்து அந்த வாலிபர்கள் அங்கிருந்த ஓடிவிட்டனர். கடற்கரைக்கு வந்த பொதுமக்கள், இளம்பெண் ஒருவர், கடல் நீரில் வெகு தூரம் செல்வதை பார்த்து திரும்பி வா என்று சத்தம் போட்டுள்ளனர். ஆனாலும் இளம்பெண் அழுதப்படி உள்ளே சென்றுள்ளார். பிறகு பொதுமக்கள் கடலில் இறங்கி அவரை மீட்டனர்.
 
இந்த சம்பவத்தில் இளம்பண் அதிகளவில் தண்ணீர் குடித்து மயங்கினார். உடனே அவரை கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த மெரினா போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
 
விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: மெரினா கடற்கரை மணலில் இளம்பெண் தனியாக அமர்ந்து இருப்பதை பார்த்த 4 வாலிபர்கள், அவரது அருகில் வந்து சுற்றி அமர்ந்துள்ளனர்.
 
இதை சற்றும் எதிர்பார்க்காத இளம்பெண், அங்கிருந்து செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் அவரை அந்த கும்பல் செல்ல விடாமல் அவரது கையை பிடித்து இழுத்து சத்தம் போட்டால் கொலை ெசய்து விடுவோம் என்று மிரட்டி, இரண்டு கைகளையும் பிடித்து பாலியல் பலாத்காரம் ெசய்ய முயற்சி செய்துள்ளனர்.
 
ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பியோடி, கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது தான் பொதுமக்கள் பார்த்து அவரை மீட்டுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் அளித்த தகவலின்படி போலீசார் மெரினா கடற்கரையில் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ெபற்று 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.
 
பாதிக்கப்பட்டவர் இளம்பெண் என்பதால் அவரது விவரங்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.
 
பொதுமக்கள் நடமாட்டம் உள்ள மெரினா கடற்கரையில் இரவு இல்லாத நேரத்திலே இளம் பெண்ணுக்கு நடந்த இந்த சம்பவத்தால் கடற்கரைக்கு வந்து செல்வோருக்கு பாதுகாப்பு கேள்வி குறியாகி சட்டம் ஒழுங்கு கேள்வி குறியாகி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.