புகழ் பெற்ற பழமையான பாபர்  மசூதி 1991 ஹிந்துவா அமைபினாரால் தகர்க்கப்பட்டது .  இந்த அயோத்தி நில பிரச்சினையை இப்போது சமரசமாக தீர்த்துக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் பிரித்துக்கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
 
இத்தீர்ப்பை எதிர்த்து 3 தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மொத்தம் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. பின்னர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
 
கடந்த மாதம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இவ்வழக்கின் விசாரணை நடத்தினர்.
 
இந்த நிலையில் இந்த வழக்கில் சமரசமாக தீர்த்துக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கொண்ட சமரச குழுவை நியமித்து உத்தரவிட்டது.
 
இந்த குழு முன்னாள் உச்சநீதிமன்ற நிதிபதி கலிஃபுல்லா தலைமையில் செயல்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த குழு முதல் நிலை அறிக்கையை 4 வாரத்தில் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்திரபிரேதேச மாநிலம் பைசாபாத்தில் சரமரசக்குழு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதில் முக்கிய அம்சம் இந்த குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேருமே தமிழர்கள்
 
சமரச குழுவின் தலைவர் இப்ராஹிம் கலிஃபுல்லா. இவர் காரைக்குடியை சேர்ந்தவர் ஆவார்.
 
வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர். இவர் கும்பகோணம் அடுத்த பாபநாசத்தை சேர்ந்தவர் ஆவார்.
 
3-வது உறுப்பினர் வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு. இவர் சென்னையை சேர்ந்தவர் ஆவார்.