சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்குத் தொடர்பாக விசாரணைக்கு ஒத்துழைக்காத சாத்தான்குளம் போலிஸார் நீதிபதியிடமே கீழ்த்தரமாக பேசியிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து சாத்தான்குளம் காவல்நிலையத்தை, வருவாய் துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவர நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சாத்தான்குளம் வழக்கை தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மாவட்ட நீதிபதி விசாரணை செய்து முழுமையான அறிக்கையை தாக்க செய்ய வேண்டும் என்றும், அதற்கு காவல்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும், வழக்குத் தொடர்பாக அனைத்து ஆவணங்கள், சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரித்துக் கொண்டிருக்கும் நிலையில், மாவட்ட நீதிபதியிடம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் மற்றும் காவலர் மகாராஜா ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் ‘உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா’ போன்ற கீழ்த்தரமான வார்த்தைகளை பிரயோகித்துள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது ..
இதனையடுத்து, காவல்துறை மீது நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சாத்தன்குளம் சம்பவம் பற்றி விசாரிக்க போலீசார் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால், வருவாய் துறையினர் கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல்நிலையத்தை கொண்டுவர உத்தரவிட்டனர்.
மேலும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் மற்றும் காவலர் மகாராஜா ஆகியோருக்கு எதிராக குற்றவியல் அவதூறு மனுவையும் தாக்கல் செய்ததுடன், ஜூன் 30 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
[su_image_carousel source=”media: 15364,15363,15366,15365″ crop=”none” columns=”2″ autoplay=”2″ image_size=”medium_large”]
மேலும் வாசிக்க: அது லாக்அப் மரணம் இல்லையாம்; சொல்கிறார் அதிமுக அமைச்சர்
மேலும், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் மாஜிஸ்திரேட் கைப்பற்றவும் உத்தரவிட்டுள்ளனர். அவ்வாறு காவல்துறையினர் கீழ்த்தரமாக பேசியதை நீதிபதியும் தன்னுடைய விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வெளியாக பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அரசு தரப்பில் இருந்து கடுமையான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இது போன்ற போலிஸார் சுதந்திரமாக வலம் வருகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.
[su_youtube url=”https://www.youtube.com/watch?v=US1crFmn_Rk” width=”700″ autoplay=”yes” title=”சாத்தான்குளம் போலீஸ் காவலில் பென்னிக்ஸ்- ஜெயராஜ் இரட்டைக் கொலை”]