தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் மற்றும் வர்த்தக துறையில் காலியாக உள்ள வரவு, செலவு உதவியாளர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
பணி மற்றும் காலியிடங்கள்: வரவு செலவு உதவியாளர் (Cost Assistant in industries and commerce department in Tamilnadu ministerial service) – 01
பணியிடம் : சென்னை
சம்பளம்: மாதம் ரூ.36,400 – ரூ.1,15,700
வயதுவரம்பு: 01.07.2018 தேதிப்படி குறைந்த பட்சம் 18 வயது இருக்க வேண்டும்.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தொடர்புடையத் துறை பயின்றிருக்க வேண்டும். வரவு செலவு சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் ஒரு வருட கால பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.01.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 02.03.2019 FN & AN
விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.