சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மத்திய அரசில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் படிக்க : மத்திய அரசின் முடிவை ஏற்க மறுத்து சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மா அதிரடியாக ராஜினாமா

சிபிஐ.க்கு தற்போது இடைக்கால இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிபிஐ.க்கு முழுநேர இயக்குனர் இல்லாத நிலையில், மற்றொரு முக்கிய பொறுப்பான, வழக்கு விசாரணை இயக்குனர் பணியிடமும் காலியாகி உள்ளது.
 
சிபிஐயின் வழக்கு விசாரணை இயக்குனராக இருந்த ஓ.பி.வர்மாவின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் 23ம் தேதியுடன் முடிந்தது.
 
பின்னர், இப்பதவி காலியாகவே உள்ளது. முழுநேர இயக்குனரும், வழக்கு விசாரணை இயக்குனரும் இல்லாமல் சிபிஐ செயல்படுவது இதுவே முதல் முறை.
 
சிபிஐ.யின் வழக்குகளையும், சட்டச் சிக்கல் தொடர்பான விவகாரங்களையும் வழக்கு விசாரணை இயக்குனரே கவனிப்பார். அந்த முக்கிய பொறுப்பில் யாரும் இல்லாதது, பல்வேறு வழக்கு விசாரணைகளை தொய்வடையச் செய்யும் என அதிகாரிகள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளதுமேலும், சிபிஐயில் பல்வேறு முக்கிய பொறுப்புகள் காலியாக இருப்பதாகவும், இவற்றில் உரிய அதிகாரிகளை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உயர் அதிகாரிகள் இல்லாததால், கடும் பணிச்சுமையும், சிபிஐ செயல்படுவதில் தொய்வு நிலையும் ஏற்படுவதாக நாடாளுமன்ற நிைலக்குழு சமீபத்தில் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்திருந்தது.
 
சுமார் மூன்று வாரம் முடிந்த நிலையில் இந்நிலையில், சிபிஐயின் வழக்கு விசாரணை இயக்குனரை நியமிப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. 
 
இப்பதவிக்கு தகுதியான, விருப்பமுள்ள நபர்களின் பெயர்களை பரிந்துரைக்குமாறு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் சார்பில் அனைத்து துறையின் செயலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. வரும் 25ம் தேதிக்குள் பெயர்களை பரிந்துரைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.