திமுக அரசை குறை சொல்ல ஏன் உங்களுக்கு மனம் வரவில்லை என எனது #பாஜக மற்றும் #அதிமுக நண்பர்கள் கேட்கிறார்கள்..

நண்பர்களுக்காக குறைகளை புகார் பட்டியலாக வாசித்திட போகிறேன்.. வேறு வழியில்லை திமுக நண்பர்கள் பொருத்தருள்க..

பட்டாசு தினத்தில் வீட்டில் உட்கார்ந்து இனிப்புகள் பட்சணங்கள் தின்று தீர்த்து ஹாயாக வாழ்த்து சொல்லாமல் அதைத் தந்திரமாக பட்டாக்கள் தினமாக்கி..

அதுவும் முதல்வரே அவர்கள் இடத்துக்கு நேரில் சென்று 282 பேருக்கு வழங்கி #இருளாளர் மற்றும் #குறவர் சமூகத்து மக்களை மகிழ்ச்சியில் எப்படி திக்குமுக்காட செய்யலாம்..

பகட்டுடன் பகல் வேஷ #சாஸ்திரம் பேசும் வலிமை மிகுந்த #ருத்ராட்ச மாலையா அல்லது எளியவர் கையில் இருக்கும் #பாசிமணி மாலையா என்றால்..

நேசத்துடன் அளித்த பாசிமணி மாலை போதும் என சொல்லி இதனை சாத்தியப்படுத்திய முதல்வர் M. K. Stalin செய்தது சாஸ்திர சம்பிரதாய ஆகமங்களை மீறியது குறை தானே..

கடந்த பத்து வருடமாக கோயம்பேட்டில் மக்கள் தீபாவளியின் போது அல்லல்பட்டு அல்லலுறும் போது, இந்த முறை எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் நிம்மதியாக போய் வர செய்த போக்குவரத்துத் துறை அமைச்சர் RS Rajakannappan வழக்கமான #அதிமுக ஆட்சி கலாச்சாரத்தை மாற்றிய செயல் பெரும் குறை தானே..

திமுக அடங்கிவிட்டது ஒடுங்கிவிட்டது பாஜக பாக்கெட்டில் சுருங்கிவிட்டது என்றெல்லாம் பிரசாரம் Annamalai Kuppusamy H Raja உள்ளிட்ட பலர் செய்தபோதிலும்..

பகுத்தறிவுக்கு ஒவ்வாத பூமி பாயாக சுருட்டப்பட்டது.. பின்னர் கடவுள் பன்றி அவதாரம் எடுக்க அது மீட்கப்பட்டது.. அதன் நன்றிக் கடனாக பூமி தேவிக்கும் பகவானுக்கும் மூலம் பிறந்த நரகாசுரன் என்ற பிள்ளை கொல்லப்பட்டது..

போன்ற ஒரு சாதி சுழ் #rss வாலாக்கள் புகுத்திய கம்பி கட்டும் கட்டுக் கதைகளை நம்பி எல்லாம் வாழ்த்து சொல்ல மாட்டேன் பிடிவாதமாக என்றே கடந்து சென்றதும் குறை தானே..

நீத்தார் பெருமை பேசும் #கீழடி #சிவகளை கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் மணச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிக்கு மேலும் மேலும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி அதிவேகமாகவும் அகழ்வாராய்ச்சிகள் நடத்திவரும் தொல்லியல் துறை அமைச்சர் Thangam Thenarasu..

4000 வருட பாரம்பரிய திராவிட இனத்தின் மூத்த மொழி #தமிழ் கொள்கையை தான் பேசுவேன் என்று பத்தாம்பசலியாக இன்று இருக்கும் நவீன இன்டர்நெட் காலத்திலும் சென்று கொண்டிருப்பதும் பெறும் குறை தானே..

இதையெல்லாம் விட ஒரு பெரிய குறை உண்டு.. அதை முக்கியமாக #திமுக வினரும் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும் நிச்சயம் மறுக்க முடியாது. .

நாலு நாளாக சென்னையில் சூரியன் காணோம் நசநசவென்று என்று மழை வேறு.. துவைத்த துணிகளை வெளியே காயப் போட முடியவில்லை..

வீட்டிலே அங்கங்கே கொடி கட்டி அமரும் நாற்காலியில் கூட ஈரம்.. வீட்டுக்குள்ளே நடக்கவும் முடியவில்லை.. வெளியில் பால்கனியில் அமரவும் முடியவில்லை..

விடியலை தருவோம் என்று சொன்ன திமுக அரசு சூரியனை ஏன் நான்கு நாட்களாக கொண்டு வரவில்லை.. எவ்வளவு பெரிய குறை இது தெரியுமா ..

இன்றாவது #சூரியன் வருமா.. திமுக சொன்ன விடியலை அது தருமா.. என்று எனது #அதிமுக #பாஜக மற்றும் #பாமக நண்பர்கள் சார்பில் கேட்டு அமர்கிறேன் 🐝🐝

https://www.facebook.com/savenra/posts/7300363143322879