திருச்சி முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதி மற்றும் சீரமைப்பு பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய விவரம் ” முக்கொம்பு அணையை ஆய்வு செய்யாமல் அதிக அளவில் தண்ணீர் திறந்துவிட்டதே பாதிப்புக்கு காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்யாமல் தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டதால் மதகு உடைந்துள்ளது. முன்கூட்டியே முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்து தண்ணீர் திறந்து விட்டிருந்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்காது.
மதகுகளை சீரமைக்கும் பணியானது, 40 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. . அனைத்து பணிகளிலும் முறைகேடுகள் நடப்பதாக குறிப்பிட்ட ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் முறைகேடுகள் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.
மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து 40 நாட்கள் ஆகியும் இதுவரை கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையவில்லை.
எனவும் அவர் கூறினார்.