வெற்றிகரமாக சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்து திரும்பிய திரும்பிய பெண் மீது, மாமியார் தாக்குதல் நடத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 
 
சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்தவருடம் அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் பிற்போக்கு ஹிந்த்துவா சக்திகள் மூலம் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
 
ஆனால் உச்ச நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்ற உறுதி கொண்ட கேரளாஅரசு முன் போரட்டங்கள் பிசுபிசுத்து போனது .
 
 

மேலும் படிக்க : உச்சநீதிமன்ற அனுமதிக்கு பிறகு சபரிமலையில் 10 இளம் பெண்கள் தரிசனம் கேரள அரசு தகவல்

 
அதேசமயம் கடந்த 2-ம் தேதி கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து மற்றும்  மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் பலத்த பாதுகாப்புடன்  சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து திரும்பினார்கள். 
 
அவர்கள் இருவரும் கோயிலுக்குச் சென்று திரும்பியுடன் ஐயப்பன் கோயில் தந்திரி கோயில் நடையைச் சாத்தினார். பின்னர் பரிகாரப் பூஜைகள் செய்த பின் மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது. 
 
சபரிமலையில் இருந்து திரும்பினாலும் பிற்போக்கு ஹிந்த்துவா சக்திகள் எதிர்ப்பு ஆகியவற்றால், கடந்த இரு வாரங்களாக போலீஸார் பாதுகாப்பில் மறைவிடத்தில் கனகதுர்கா தங்கி இருந்தார். 
 
இந்நிலையில் போலீஸ் பாதுகாப்பிலிருந்த கனகதுர்கா செவ்வாய் காலை தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டில் இருந்த கனகதுர்காவின் மாமியாருக்கும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றது குறித்து கனகதுர்காவுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.  
 
தகராறு முற்றி கனகதுர்காவை அவரின் மாமியார் தலையில் பலமாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதை எதிர்பாரா கனகதுர்காவுக்கு தலையில்  காயம் ஏற்பட கழுத்திலும் அடி விழுந்தால்  பெரிதலமன்னா தாலுக்கா மருத்துவமனைக்குக் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
 
பின் மேல் கிசிச்சைக்காக மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் கனகதுர்கா சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
காயப்பட்ட கனகதுர்காவின் மாமியாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
மாமியாரின் இந்த வெறி செயல் பெண்கள் மத்தியில் கோபத்தை கிளறி உள்ளதாக லோக்கல் செய்திகள் தெரிவிக்கின்றன ..