தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் இன்று (நவம்பர் 22) காலை 8 மணிக்கு தொடங்கியது. நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தல், தற்போது நிறைவடைந்துள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கியுள்ளார்.
இந்த தேர்தலில் மொத்தம் 26 பதவிகளுக்கு நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். தேர்தலில் 1,303 பேர் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 1,050 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
நடிகை குஷ்பு, எஸ்.வி.சேகர், டி.ராஜேந்தர், சமுத்திரக்கனி உள்ளிட்ட திரையுலக முக்கிய பிரமுகர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். இதற்கு முன்பு நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தல்களில், வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த முறை வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை; மீறினால் ரூ.5,000 அபராதம், 6 மாதம் சிறை