தமிழக அரசு மருத்துவமனைகளில் தற்காலிக அடிப்படையில் 353 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு மருந்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள்: மருந்தாளுநர் – 353
சம்பளம்: மாதம் ரூ. 35400 – 112400
தகுதி: பார்மசி பிரிவில் டிப்ளமோ முடித்து, பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்).
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2019
விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு மருந்துவ பணியாளர் தேர்வாணையம் என்ற இணையதளத்தின்ல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.