தமிழ்நாடு நகரம் மற்றும் திட்டமிடல் துறையில் காலியாக உள்ள கட்டிடக்கலை உதவியாளர், திட்டமிடல் உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கட்டிட கலையியல் துறையைச் சேர்ந்த பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்: Architectural Assistant/ Planning Assistant – 13

சம்பளம்: மாதம் ரூ.37,700 – 1,19,500

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: நகர திட்டமிடல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சிவில் என்ஜினியரிங் துறையில் பட்டம் அல்லது கட்டிடக்கலை துறையில் பட்டம் அல்லது இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியர்ஸில் சிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதிப்படி 18 முதல் 30 வயதுக்க்குள் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2018

தேர்வு நடைபெறும் தேதி: 22.12.2018

தேர்வு நடைபெறும் மையங்கள்: சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: TNPSC என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தேர்வு குறித்த விவரங்கள் அறிய…