கோவையில் தீவிரவாதி நாதுராம் கோட்சேக்கு ஆதரவாக பேசிய அசிஸ்டன்ட் கமிஷனர் தூக்கியடிக்கப்பட்டார் என்ற செய்தி வந்த நேரத்தில் அதைக் கண்டு அகமகிழ முடியவில்லை.. காரணம் மயிலாப்பூரில் நேற்றைய தினம் வெளிப்படையாகவே ஊடுருவிய ஆர்எஸ்எஸ் என்ற செய்தி அதேநேரத்தில் வந்ததுதான்..
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியின் காரணமாக பல்வேறு அரசு துறையில் பல்வேறு கட்டத்தில் ஆர்எஸ்எஸ் காரர்கள் ஊடுருவி உள்ளார்கள்.. அதுவும் அன்றைய அதிமுக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மர்ம மரணத்திற்கு பின்னர் ஆர்எஸ்எஸ் ஊடுருவல் மிக மிக அதிகம்..
அதிலும் முக்கியமாக சில முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, மாபேஃ பாண்டியராஜன், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் உள்ளிட்டவர்கள் தாங்கள் அமைச்சராக செயல்பட்ட காலத்தில் ஆர்எஸ்எஸ் சார்பாக ஆடிய ஆட்டங்கள் சொல்லி மாளாது..
இதன் சாட்சி மேலே சொன்ன கோவை போலீஸ் அசிஸ்டென்ட் கமிஷனர் ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு என்பதும்.. மயிலாப்பூரில் ஆர்எஸ்எஸ் கூட்டத்துக்கு அனுமதி கொடுத்த மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளவர்களும் அவர்களே தான் என்பதும்..
காவல்துறையில் இப்படிப்பட்ட நபர்களை திமுக அரசு உன்னிப்பாக கவனித்து இதுபோல நிகழ்வுகள் இனி நடக்கா வண்ணம் களை எடுக்கப்பட வேண்டும் என்பதனை நமக்கு உணர்த்தும் பாடம் தான் என்பதும்..
காவல்துறையில் மட்டுமல்ல சமீபத்தில் அறப்போர் இயக்கம் கொடுத்த பகீர் புகார் என்னவென்றால்..
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உறுப்பினர் சேர்க்கையில் நடைபெற்ற மிகப்பெரிய conflict of interest தவறுகளை சுட்டிக் காட்டியது தான்..
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஜெரார்டு கிஷோர் என்பவர் ஆந்திராவில் ஜெகன்மோகன் கட்சியிலிருந்து பாஜகவுக்கு மாறிய பின்னர் அதற்கு ஆதரவாக செயல்படும் எம்பியின் வலது கை என்பதும்..
அதுசரி ஆந்திரா ஜெகன்மோகன் ரெட்டி கட்சி எம்பி ஏன் பாஜகவுக்கு தாவினார் என்றால்.. சிபிஐ அந்தக் கம்பெனி மீது 947 கோடி வங்கி ஊழல் charge sheet செய்து உள்ளது..
https://timesofindia.indiatimes.com/city/hyderabad/947-crore-loan-fraud-cbi-chargesheets-mp-rama-krishna-raju/articleshow/88626540.cms?fbclid=IwAR3bTWHUsLD-Ctl60WHVNLE608AFyCQyNrRLIlAN_zw28ZDmkSsZAoF1khs
இந்த ஊழல் புகாரை மறைக்க பாஜகவின் சார்பாக செயல்படும் எம்பியின் நோக்கம் உள்ளங்கை நெல்லிக்கனி என்பதால் மென்மேலும் இதனைப்பற்றி விலாவாரியாக விளக்கத் தேவையில்லை என்பதும் ..
இந்த சூழ்நிலையில்தான் அப்படி 923 கோடிகள் ஊழல் புரிந்த கம்பெனியின் பிரசிடெண்ட் ஆக இருந்த ஜெரார்டு கிஷோர் தான் தற்போது தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினர் ஆகியுள்ளார்..
அதில் அறப்போர் வைக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டு என்பது குற்றம் சாட்டப்பட்ட கிஷோர் என்பவரே அவரின் Indbharath கம்பெனி வழக்குகளை இனி விசாரித்து முடிவுகளை அறிவிக்கும் அதிகாரத்திற்கு வந்தது தான்..
இப்படியாக ஆர்எஸ்எஸ் சார்பான பாஜகவில் இயங்கும் ஆட்கள் திமுக ஆட்சியிலும் அதிகார மையத்துக்கு வருவது எப்படி.. இதையெல்லாம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு செல்கிறதா ..
அல்லது கடந்த பத்தாண்டுகளாக ஆர்எஸ்எஸ் ஏஜெண்டாக செயலாற்றிய குறிப்பிட்ட ஐஏஎஸ் அதிகார வர்க்கம் இது எல்லாம் தெரியாதபடி மறைக்கிறதா என்றும் தெரியவில்லை..
திமுக அரசு தமிழ்நாடு அரசுக்குள் ஊடுருவிய ஆர்எஸ்எஸ் ஆக்டோபஸ் பிடியை நீக்க கடும் போராட்டத்தினை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று சொன்னது அடியேன் அல்லவே அல்ல..
மாறாக திராவிட சித்தாந்தத்தின் போர்வாள் தமிழ்நாடு அரசின் திட்டக்குழு தலைவர் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் ஜெயராமன் அவர்கள்..
அரசு அதிகாரத்தில் மூன்று முறை தீவிரவாத காரணங்களுக்காக தடைசெய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் சிந்தனை சக்திகள் குடியிருக்கும் வரை, அடித்தட்டு மக்களுக்கு எந்த பயனும் திமுக அரசு செய்தாலும் அது மக்களிடம் சென்று சேராது..
அறிஞர் அண்ணா சொன்னது போல வெண்ணெய்க் கட்டியை அரசு தந்தாலும் அது பல்வேறு கைகள் மாறி மாறி உருகி உருகி கடைசியில் பயனாளியிடம் சென்று சேரும்போது ஒன்றுமே இல்லாமல் போய்விடும்..
ஆக கூட்டணி கட்சிக்காக பாடுபடும் திமுக அரசின் முக்கிய பொறுப்பு என்பது அரசு எந்திரத்தில் ஒளிந்திருக்கும் ஆர்எஸ்எஸ் சிந்தனைவாதிகளை தயவு தாட்சண்யம் இல்லாமல் தூக்கி அடிக்க வேண்டும் என்பது ஜனநாயகவாதிகளின் மட்டுமல்ல..
ஆர்எஸ்எஸ் இந்துத்துவா சித்தாந்தங்களை எதிர்க்கும் கூட்டணி கட்சிகளின் முக்கியமாக கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையாக இருந்திட கூடும் ..
திமுக அரசு விரைந்து விழித்திடுமா.. காரிருள் தான் அகன்றிடுமா..
சமூக வலைதளத்தில் காண: https://www.facebook.com/savenra/posts/8060125157346670
அறப்போரின் ஆதார வீடியோ: