தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறையில் காலியாக உள்ள Assistant Training Officer பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Assistant Training Officer (Stenography-English) – 12
Assistant Training Officer (Secretarial Practice) – 01
சம்பளம்: மாதம் ரூ.35,900 – 1,13,500
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சு பிரிவில் Higher Grade and Senior Grade தேர்ச்சு பெற்று தமிழக அரசால் நடத்தப்படும் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Commercial Pratice பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று சுருக்கெழுத்து தட்டச்சில் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.150 மற்றும் ஒருமுறை பதிவுக் கட்டம் ரூ.150 செலுத்த வேண்டும். ஏற்கனவே, ஒருமுறை பதிவுக் கட்டணம் செலுத்தியவர்கள் திரும்ப செலுத்த தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2019
விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிகக வேண்டும்.